முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொ.சங்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

                                         91 மனுக்கள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடனுதவி,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 91 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பொ.சங்கர் அறிவுரை வழங்கினார்.

                             தாட்கோ மூலம்

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மூலம் ஊட்டியைச் சேர்ந்த மோகன்ராட் என்பருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் ரூ.9 லட்சத்து 20 ஆயிரத்து 077 மதிப்பிலான ரூரிஸ்ட் வாகனத்தையும், எமரால்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பருக்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 536 மானியத்துடன் ரூ.6 லட்சத்து 91 ஆயிரத்து 787 மதிப்பிலான பிக்கப்போடு வாகனத்தையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகளையும் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்தினம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) பாஸ்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப் பாட்ஷா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்