முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம் என்றும், பொதுமக்களும், விவசாயிகளும் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.  தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்காக கூட்டப்பட்டது என்றால், தி.மு.க. செ

யல்தலைவர் மு.க.ஸ்டாலின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் ஏன் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடச் சொல்லவில்லை?. ஏன் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை?. கூட்டம் கூட்டியிருக்கும் மு.க.ஸ்டாலின் கட்சி ஆட்சி செய்தபோது நீர் ஆதாரங்களை பெருக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? அண்டை மாநிலத்தில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய தாங்கள், அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கம்யூனிஸ்டுகளை நேரடியாக கண்டிக்க வேண்டியது தானே? ஆக இவர்கள் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம். அரசியல் எதிர்காலம் தேடுவதற்காக கூட்டிய கூட்டம்.அதனால், அவர் அழைக்கும் கடை அடைப்பில் மக்களும், வணிகர்களும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆட்சியில் இருக்கும் போது தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டவர்கள் இன்று சாமானியர்களின் பொருளாதாரத்தை கெடுக்கும் அளவிற்கு கடை அடைப்பிற்கு அழைப்பு விடுக்கிறார்கள். பொதுமக்களும், விவசாய சகோதரர்களும் இதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago