தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை 100 சதவீதம் அகற்றுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

மேன்மைமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் சீமைக் கருவேல மரங்கள் வேருடன் அகற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் 100 சதவீதம் அகற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில்; நடைபெற்றது,இக்கூட்டத்தில் அனைத்து அரசுத்துறையினரும் தமக்குச் சொந்தமான அலுவலக வளாகங்கள், நிலபரப்புகள், சாலை ஓரங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி வரும் நிலையில்; தனியாருக்குச் சொந்தமான இடங்களில் அகற்றப்படாமல் மீதமுள்ள சீமைக் கருவேல மரங்களை உடனே அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் எம்.ரவி குமார் உத்தரவிட்டார்.மேலும் சீமை கருவேல மரங்களை ஒழிப்பதில் அரசு அலுவலர்களோடு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஒத்துழைப்போடு செயல்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றிட முன்வரவேண்டும். தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தாமாக முன்வந்து விரைவாக சீமைகருவேல மரங்கள் அகற்றினால் தூத்துக்குடி மாவட்டத்தை சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக மாற்றவேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ராஜாமணி, மாவட்ட வன அலுவலர் ராகேஷ்குமார் ஜக்கனியா, தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிச்சை, கோட்டாட்சியர்கள் தியாகராஜன், அனிதா, நகராட்சி ஆணையர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: