வளர்ச்சித்திட்டப்பணிகள் கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      தேனி
theni collecter

 தேனி.- தேனி மாவட்டம், தேனி, பெரியகுளம், க.மயிலாடும்பாறை ஆகிய ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை  மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம்,  செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்வின்போது, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.0.90 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடப்பணிகள், நர்சரி-நாற்றாங்கால் ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.0.90 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டார். தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.0.60 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் பணி; முடிவுற்றதையும், ஒருங்கிணைந்த பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கழிவறை கட்டும் பணிகளையும், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.42 லட்சம் மதிப்பீட்டில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணிகளையும், நாகலாபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.83 இலட்சம் மதிப்பீட்டில் சிவலிங்கநாயக்கன்பட்டியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
 மேலும், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் கண்டமனூர் ஊராட்சியில் 14-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் 1.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், மதிய உணவுத்திட்டத்தின் கீழ் புதுராமச்சந்திராபுரத்தில் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் சமையலறை மற்றும் வைப்பறை கட்டப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் புதுராமச்சந்திராபுரத்தில் ரூ.6.30 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதையும், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ராஜேந்திரா நகரில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம்,  செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  ஆய்வுக்குப்பின் மாவட்ட கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகஅரசு தமிழகத்தை வளமான, பசுமையான மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் பயன்தரக்கூடிய மரக்கன்று நடவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், போடிநாயக்கனூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாற்றுப்பண்ணைகளில் வேம்பு, புளி, அரசு, இலவம் போன்ற மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் மரக்கன்று நடவு செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 கிராமப்புற பொதுமக்களை கழிப்பறை பயன்படுத்திட தனிநபர் கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, தனி நபர் கழிப்பறை ஏற்படுத்திட போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத நபர்களை கண்டறிந்து பொதுகழிப்பறையினை பயன்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பராமரித்து சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், கிராம ஊராட்சிகளில் பெறப்படும் மற்றும் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றிடவும், ஊராட்சிப் பகுதிகளில் சாலைகள், மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளை முறையாக பராமரித்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
 செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சு.வடிவேல் செயற்பொறியாளர் செல்வி.எம்.கவிதா உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் ஞானசேகரன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதமணி பாண்டியன் சுருளிவேல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.மலர்விழி சந்திரபோஸ்  உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அ.கதிரவன் அ.இளையேந்திரன்  உட்பட அனைத்து செய்தியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: