முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ‘‘நாட்டில் சீர்திருத்தங்கள் கொண்டுவர எனக்குக் கூடுதலாக அரசியல் துணிவு கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் குடிமைப் பணி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.  குடிமைப் பணி அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:  குடிமைப் பணியில் உள்ள அதிகாரிகள் எல்லோரும் குழு மனப்பான்மையுடன் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல பாடுபட வேண்டும்.

அரசியல் துணிவு வேண்டும்
விரைவாக முடிவெடுப்பதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அதிகாரிகள் பயப்படத் தேவையில்லை. பொதுமக்களின் நலனுக்காக நேர்மையான முறையில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் நான் துணை நிற்பேன். அரசியல் துணிவு, அதிகார மையத்தின் பணி, மக்கள் பங்களிப்பு ஆகிய மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் நாம் கொண்டுவர வேண்டும். அதை செய்தால் நல்ல முடிவுகள் கிட்டும். சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசியல் துணிவு வேண்டும். அதில் எனக்கு குறைவில்லை. இன்னும் சொல்லப் போனால், அந்தத் துணிவு கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது.

சவால்களை வாய்ப்பாக்குங்கள்
மக்கள் சந்திக்கும் பிரச்சினை களுக்குத் தீர்வு காண வழக்கமான முறையில் அல்லாமல், மாற்றி யோசித்து முடிவெடுங்கள். உங்கள் பணி முறைகளை மாற்றிக் கொண்டால், சிந்தனைகளை மாற்றிக் கொண்டால் நல்லது. சவால்களை வாய்ப்பாக நினைத்து செயல்படுங்கள். ‘தனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனநிலையில் இருந்து மூத்த அதிகாரிகள் மாற வேண்டும். இளநிலைஅதிகாரிகள் தெரிவிக்கும் புதிய யோசனைகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்துவது குறித் து பரிசீலிக்க வேண்டும். அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கனவு நனவாக வேண்டும்
எனவே, நமக்குள் இருக்கும் பிடிவாதம், குறைகள் போன்ற வற்றை நாம் ஒப்புக்கொள் கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். சுதந்திர போராட்டத் தலைவர்கள் என்ன கனவு கண்டார்களோ அதன்படி வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்திய நாட்டை மாற்றி அமைக்க குடிமைப் பணித் துறை அதிகாரிகள் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்