முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீர்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

10 நாட்களுக்கு ஒரு முறை

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தெரிவிக்கையில், “தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர் ஆதாரங்களாக பில்லூர் அணை, பவானி ஆற்று நீர், ஆழியார் ஆற்று நீர், சிறுவாணி அணை ஆகிய நீர் ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்கள் மூலமாக பெறப்படும் குடிநீரைக் கொண்டு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்படும் ஒரு சில இடங்களில்          10 நாட்களுக்கு மேல் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கண்டறியப்பட்டது, இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு அப்பகுதிகளுக்கு 10 நாட்களுக்குள் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொது  மக்கள் அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு குடிநீர் தேவைப்பட்டால் குடிநீர் லாரிகள் மூலம் உடனடியாக விநியோகம் செய்யவும் மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  குறிப்பாக, குடிநீர் தரத்தை அவ்வப்போது தரப்பரிசோதனை செய்து குடிநீர் விநியோகம் செய்யுமாறும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கும் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.  
மேலும், குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் பழுதினை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மற்றும் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறும் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப  தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் மதியழகன், மாநகரப் பொறியாளர் (பொ) பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத்குமார், செயற்பொறியாளர்கள் சுகுமார், ரவிச்சந்திரன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்