முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.ஐ மருத்துவமனை பேராயர் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

24மணி நேரமும் சிகிச்சை அளிக்க கூடிய சிஎஸ்ஐ மருத்துவமனை சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபனால் அரக்கோணம் நகரில் திறந்து வைக்கபட்டது.. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரம், சுவால்பேட்டை சரோஜினி தெருவில் நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்ட எளிய விழாவில் சிஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

மருத்துவமனை

இந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய அந்திரேயர் ஆலய வடக்கு குருசேகர ஆயர் சாமிவேல் புனிதராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிஎஸ்ஐ (தென்னிந்திய) திருசபையின் பேராயர் பேரருட் டாக்டர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் திறப்பு விழாவிற்கு தலைமை பொறுப்பேற்று 24மணி நேர மருத்துவமனையை திறந்து வைத்தார். அவரது துணைவியார் பேராய அம்மா யமுணா ஜார்ஜ் ஸ்டீபன் குத்து விளக்கேற்றி வைத்தார்.

சென்னை பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் மருத்துவமனையை திறந்து வைக்கும் போது பேசியதாவது. இறைவன் அருளால் இந்த மருத்துவமனையானது திறக்கப்படுகிறது இதன் மூலம் எல்லா மக்களும் மருத்துவமனையின் முழுபயன்களை பெற்று நோய் இல்லாத நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்வு வாழ வேண்டும் பரிசுத்த தேவன் அருள்பெற்ற மருத்துவமனை உங்கள்; ஆரோக்கியத்திற்கு என்றும் துணையாக இருக்க வேண்டுமென்றும் ஆண்டவனிடம் இந்த நல்ல நாளில் கேட்டு கொள்கிறேன் என பிராத்தனை வாயலாக பேசினார்.

இந்த விழாவில் பேராய செயலாளர் சாமுவேல் ஜேம்ஸ், பேராய பொருளாளர், பேராய வட்டார தலைவர்கள் ஜான்சன், சௌந்தராஜன், இராஜன்தேவக்குமார், பேராய உப தலைவர்கள் பால்தயானந்தன், ஆகியோருடன் நூற்றுகணக்கான ஆயர்கள், பல்வேறு குருசேகர செயலாளர்கள், பொருளாளர்கள், நிறுவன தலைவர்கள், திரளான கிறிஸ்தவ மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.வடக்கு குருசேகர ஆயர் சாமிவேல் புனிதராஜ் செயலாளர் டேனியல்தம்பிராஜ், பொருளாளர் பிரினஸ் தேவாசீர்வாதம், ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இம்மருத்துவமனையின் மூலம் நகர மக்களுக்கு 24மணி நேர மருந்தகத்துடன், வைத்தியமும்,; மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே, இசிஜி, டயலிஸிஸ் வசதியுடன்;, நவீன ரத்த பரிசோதனை மைய வசதிகளும் ஏற்படுத்தபபட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்