முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடல்:

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு ராமேசுவரம் அக்னிதீர்த்தக்கடலில் 10 ஆயிரத்துக்கும் மேலான  பக்தர்கள் புனித நீராடி, திருக்கோயிலில் புதன் கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
    ராமேசுவரத்தில் சித்திரைமாத அமாவாசையை முன்னிட்டு புதன்  கிழமை அதிகாலையில் ரயில் மற்றும் தனியார் வாகனம் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.இவர்கள் காசிக்கு நிகரான புனித தீர்த்தமாக கருதப்படும் அக்னிதீர்த்தம் கடல் பகுதியி்ல் முன்னோர்களுக்கு வருடாந்திர திதி பூஜையும்,தர்ப்பணபூஜைகள் மற்றும் சிறப்பு  பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டு அக்னிதீர்த்தக்கடலில் நீராடி்னர்.அதன் பின்னர்  ராமநாதசுவாமி திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களிலும்  நீராடி திருக்கோயில் பிரகாரகங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம்  காத்திருந்து ராமநாதசுவாமி,பர்வதவர்த்தின அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக  சுவாமி சன்னதிகளில் தொடர்ந்து பூஜைகள்  நடைபெற்றது.அதுபோல பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருக்கோயிலை சுற்றி நான்கு ரத வீதியில் குடிநீர் வசதிகள், ஓய்வு இடங்கள்,வழக்கத்தைவிட பக்தர்களுக்கு கூடுதாலக அன்னதானம் உள்பட சிறப்பான முன் ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உத்தரவின்பேரில் திருக்கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்களும்.ஊழியர்களும் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்