முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யுவன்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      சென்னை

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது பல கனவுள்களை நினைவாக்கிய ஒரு மேடை. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி இது. இது பிரபலமான நிகழ்ச்சி மட்டுமில்லை , பல பிரபலங்களை உருவாக்கிய ஒரு நிகழ்ச்சியும் கூட. இந்த நிகழ்ச்சிக்கு பல இசை மேதைகள் வருகை தந்திருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர்

பாடகி ஜானகி அம்மா முதல், இசை அமைப்பாளர் அனிருத் வரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். தற்பொழுது சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 நிகழ்ச்சியில் டாப் 10 போட்டியாளர்கள் தேர்வாகிவிட்டனர். இதன் கொண்டாடட்டமாக இந்த வாரம் ஒரு இசை அமைப்பாளர் வருகை தரவுள்ளார். ஆமாம், யுவன் விரும்பிகளுக்கு ஓர் நற்செய்தி. இந்த வாரம் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சூப்பர் சிங்கர் செட்டிற்கு வருகை தருகிறார். அவர் அந்த செல்ல குரல்களின் இசையை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்மேலும் யுவன் அவர்களின் 20 வருட இசை பயணத்தை கொண்டாடும் வகையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பல படங்கள் வரிசியலிருக்க இந்த வருடம் திரைக்கு வரவிருக்கும் படம் பலூன் திரைப்படத்தின் இயக்குனர் சினீஷ் வருகை தந்திருந்தார். இருவரும் பலூன் திரைப்படத்தில் ஒரு சூப்பர் சிங்கருக்கு சான்ஸ் கொடுக்க விரும்பினார். நல்ல திறமையிருந்தும் இசை பயணத்தில் நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கும் சில சூப்பர் சிங்கர்கள் யுவன் முன் பாடினர். பின் அணைத்து சூப்பர் சங்கரின் பெர்பாமன்சும் யுவனை ஈர்த்தது, பலருக்கும் வாய்ப்பு கொடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். மேலும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா அவர்களும் கலந்துகொண்டார்.

மேலும் ராகுல் நம்பியார், சுவேதா மோகன் மற்றும் ஹரிசரண் இந்த ஜூனியர்களின் பெர்பாமன்ஸ்களை கண்டுகளித்தனர். அதனால் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை 7 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்