கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      கடலூர்
cud collector 2017 04 28

 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் புதிய கலெக்டர் அலுவலகத்தின் பொதுமக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தில் நடைபெற்றது.

அலுவலர்களுக்கு அறிவுரை

 இக்கூட்டத்தில் கலெக்டர் விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, கடலூர் மாவட்டத்தில் தற்போதைய வறட்சி நேரத்தில் கால்நடைகளுக்காக 9 இடங்களில் உலர் தீவன கிடங்குகள் திறக்கப்பட்டு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. தீவன சோளமும் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. கறவைப்பசுக்களுக்கு தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கால்நடைகள் விரும்பி உண்ணும் அசோலா மற்றும் மண் இல்லா பசுந்தீவனம் வளர்ப்பு குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் அனைவரும் தங்கள் கால்நடைகளுக்கு மேற்கண்ட உணவு பொருட்களை வழங்கி முழுமையாக பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். அலுவலர்கள் களத்திற்கு (கநைடன) சென்று விவசாயிகளின் பிரச்சனைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை உயர் அதிகாரிகளை சந்தித்து வழங்கவேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். களத்திற்கு செல்லாத அலுவலர்கள் மீது ¬கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

ரூ.140 கோடி மதிப்பில்

 கடலூர் மாவட்டத்தில் நபார்டு வங்கியின் நிதியுடன் ரூ.140 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பணிகள் நடைபெறும்போது விவசாயிகள் பணிகளை கண்காணிக்கவேண்டும். நமது மாவட்டத்தில் இதுவரை வறட்சியால் பாதிக்கப்பட்ட 77,634 விவசாயிகளுக்கு ரூ.55.50 கோடி மதிப்பிலான இடுபொருள் உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

25000-க்கான காசோலை

கலெக்டர் பயிர் விளைச்சல் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற குறிஞ்சிப்பாடி வட்டாரம் கீழூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (கம்பு) அவர்களுக்கும், கன்னித்தமிழ்நாடு கிராமத்தை சேர்ந்த வெண்ணிலா (மணிலா) அவர்களுக்கும் தலா ரூ.25000-க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், கடலூர் வட்டாரம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயபாலன் (நெல்) அவர்களுக்கும், உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேன்மொழி (கரும்பு) அவர்களுக்கும் முதல் பசரிசாக தலா ரூ.15000-க்கான காசோலைகளையும், உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாரதி (நெல்) அவர்களுக்கும், வாண்டரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி (கரும்பு) அவர்களுக்கும் இரண்டாம் பரிசாக தலா ரூ.10000-க்கான காசோலைகளையும் வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் இரா.சு.மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்), எஸ்.ரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் (ம.தி) என்.கனகசபை, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) மோகன், நபார்டு உதவி பொது மேலாளர் சங்கர், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆட்சியர் எம்.மணிமேகலை மற்றும் இதர மாவட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: