முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில்,  திருப்பூர் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி,  மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன், ஆகியோர்  முன்னிலையில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன்  தலைமையில் நடைபெற்றது.

குடிநீர் திட்டப்பணிகள்

இக்கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகள் மற்றும் அவிநாசி, குன்னத்தூர், சாமளாபுரம், ஊத்துக்குளி மற்றும் திருமுருகன்பூண்டி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்  குடிநீர் திட்டப்பணிகள் குறித்து   வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொது மக்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி சீரான முறையில் குடிநீர் வழங்குவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சரியான முறையில் திட்டமிட்டு குடிநீர் பற்றாக்குறையினை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவும், நீர் உள்ள இடங்களைக்  கண்டறிந்து தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சரிசெய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுலவர்களுக்கு  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  அறிவுறுத்தினார்கள்.

இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என். விஜயகுமார் (திருப்பூர் வடக்கு),திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார் , திருப்பூர் மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர்கள் திருமுருகன், தமிழ்ச்செல்வன், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் மனோகரன்,  மாநகர நல அலுவலர் பூபதி, மண்டல  உதவி ஆணையர்கள்,  பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்