முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திட்ட முகாம் எம்எல்ஏ.சு.ரவி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 அரக்கோணம் அருகே அம்மா திட்ட முகாமில் பங்கேற்ற எம்எல்ஏ. சு.ரவி கிராம மக்களிடம் நலஉதவிகளை வழங்கினார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரம், அருகே கைனூர் ஊராட்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தி;ல் அம்மா திட்ட முகாம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாசில்தார் பாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஜெயந்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜலாஜசோழன், ஆகிய இருவர் முன்னிலை வகித்தனர். அதிமுக ஊராட்சி கழக செயலாளர் வாசு வரவேற்று பேசினார்.

 

 

மக்களை தேடி

சிறப்பு அழைப்பாளர் சு.ரவி முகாமில் கலந்து கொண்டு கிராம மக்களிடம் நல உதவிகளை வழங்கி பின்னர்; உரையாடினார். அப்பொழுது அவர் கூறியதாவது. உங்களை ( மக்களை பார்த்து ) தேடி அதிகாரிகள் வந்து உங்கள் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டுமென்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்த அம்மா திட்ட முகாமிற்கு உத்திரவிட்டுயிருந்தார். இதனால் 60 சதவிகித கிராம மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு இருக்கிறது.

 

தற்போது எனது அலுவலகத்திற்கு அதிக அளவில் முதியோர் உதவி தொகை கேட்டு வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு அரசு ஆணைகள் அம்மா திட்ட முகாமிலே வழங்கபட்டு இருக்;கிறது. இருந்தும் பணம் சேரவில்லை என்கிற புகார் வந்துள்ளது விசாரணை செய்ததில் வங்கி கணக்கு தொடங்காமலும், ஆதார் எண் இணைக்காமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த குறைகளை கிராம அதிகாரிகளே சற்று மனிதாபிதத்துடன் முதியோர்களிடம் அணுகி தீர்த்து வைக்கும்படி கேட்டு கொள்கிறேன் ஏனெனில் எல்லோரும் ஏழைகளே அவர்களுக்கு நீங்கள்தான் உதவ முன்வர வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.. இவ்வாறு எம்எல்ஏ பேசினார்.

நிகழ்வில் அதிமுக மாவட்ட பிரதிநிதி நாகராஜன், ஒன்றிய மகளீரணி மோகனா, கிளை செயலாளர்கள் பாலன், தயாளன், உள்ளிட்ட திரளான கிராம மக்கள் அம்மா முகாமில் கலந்து கொண்டனர். விழாவை தொகுத்து வழங்கிய கிராம அதிகாரி தணிகாசலம் இறுதியில் அவரே நன்றியும் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்