முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பாக விஞ்ஞான முறையில் இலாபகரமான கறவை மாடு வளர்ப்பு முறைகள் குறித்தான கருத்தரங்கு

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பாக விஞ்ஞான முறையில் இலாபகரமான கறவை மாடு வளர்ப்பு முறைகள் குறித்தான கருத்தரங்கு ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 27.4.2017அன்று   நடத்தப்பட்டது.

கருத்தரங்கு

இக்கருத்தரங்கிற்கு ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் .வி. தெய்வநாயகம் தலைமை தாங்கினார்.  இக்கருத்தரங்கில் விஞ்ஞான முறையில் இலாபகரமான கறவை மாடு வளர்ப்பு முறைகள் குறித்து டாக்டர்.எஸ். நெல்சன்~யாம்  உரையாற்றினார்.  அவர்தம் உரையில் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு முக்கிய அம்சமாகும்.  அவ்வுணவும் சரியான அளவில் சரியான அளவு சத்துக்களுடன் இருக்க வேண்டும்.  நடைமுறையில் உள்ள தீவனமளிக்கும் முறைகள், பால்உற்பத்தி அளவு, பால் கொழுப்பு சதவீதம், உடல்எடை, பால் உற்பத்தி நிலை ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 

இக்கருத்தரங்கில் ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்  கே. நாச்சிமுத்து , செயலாளர் எஸ். nஐகநாதன்  ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் கே. சக்திவேல்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் .மு.பா. பாலாஐp  வரவேற்றார்.  கூட்டுறவு பிரச்சார அலுவலர் கோ. வெங்கடராமன்  நன்றி கூறினார்.  இக்கருத்தரங்கில் 150 பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்