முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

கோவையில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அப்போது அமைப்பின் தேசிய தலைவர் ஹெச்.என். விஜய ராகவ ரெட்டி, முன்னாள் தலைவரும் முன்னாள் அறங்காவலருமான ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை அமைப்பின் தலைவர் கே.ராஜவேல் ஆகியோர் கூறியதாவது - தற்போது கட்டுமானத் துறைக்கு அனுமதி அளிக்கும் அரசின் நடைமுறை மிகவும் சிக்கலானதாக உள்ளது. அத்தகைய நடைமுறைகளை எளிமையாக்கப்பட வேண்டும். மேலும், ஒற்றை சாளர முறையில் கட்டுமானங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கட்டுமானங்களுக்கான அனுமதி வழங்குவதில் மிகவும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதைத்தவிர, சமீபகாலமாக, கட்டுமானத்துக்கான மூலப் பொருள்களான சிமெண்ட், மணல், இரும்புக் கம்பி ஆகியவற்றின் விலை கடுமையான உயர்வைக் கண்டுள்ளது.
பெரும்பாலும் கட்டுமானங்களுக்கு ஆற்று மணல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், கட்டுமானத் துறையை சார்ந்தவர்கள் செயற்கை மணலை பயன்படுத்த முன்வர வேண்டும் என பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கேட்டுக் கொள்கிறது. ஆற்று மணலின் விலையுடம் ஒப்பிடும்போது, செயற்கை மணலின் விலை மிக குறைவு. அதே சமயம், செயற்கை மணல் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்க மிகவும் உதவிகரமாக இருக்கும். செயற்கை மணலின் தரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், செயற்கை மணல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் தேவையான நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும்.
கட்டுமானத் துறையில் உள்ள திறன்மிக தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.  நல்ல வளர்ச்சியை பெற்று வரும் கட்டுமானத் துறைக்கு உதவும் வகையில், மணல், கம்பி, சிமெண்ட் ஆகியவற்றின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கேட்டுக் கொள்கிறது இவ்வாறு  கூறினார்கள்.
அசோசியேஷனின் கோவை பிரிவு அசோசியேஷனின் 20 வது தலைவராக கே.ராஜவேல், துணைத் தலைவராக கே.சின்னசாமி, செயலாளராக வி.சிவராஜன், பொருளாளராக கே.பன்னீர்செல்வம், துணைச் செயலாளராக ஏ. பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு அசோசியேஷன் தேசிய தலைவர் என்.விஜய ராகவ ரெட்டி  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழாவிற்கு வி.என். வரதராஜன் தெற்கு ஐஐ பிரிவு துணைத் தலைவர்,   ஜி. வேட் ஆனந்த், மாநில தலைவர், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ராஜேஷ் கோயல், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹிந்துஸ்தான் ப்ரிஃபப் லிமிடெட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்