முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் பீமகுளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 1 மே 2017      வேலூர்

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பீமகுளம் ஊராட்சியில்; உழைப்பாளர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கலெக்டர் சி.அ.ராம்மன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

கிராம சபா கூட்டம்

கிராம சபா கூட்டவேலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடைபெறுகிறது. அதனடிப்படையில்; பீமகுளம் ஊராட்சியில்; கிராம சபா நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே இதுபோன்ற கிராம சபா கூட்டங்களில்; திட்டங்கள் வகுத்து அதற்குரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமசபா கூட்டத்தில் கிராம பொதுமக்கள் ஊராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் என்ன என்பதையும் அவைகள் முழுமையாக செயல்படுத்தப்படும் திட்டங்களை வகுத்து அதற்குரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அதற்கான வரசு செலவு அறிக்கையினை தெரிந்து கொண்டு மேலும் அவர்கள் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் விதமாக இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்திய அரசு மூலம் 5 ஆண்டு நிதி திட்டம் என்ற திட்டம் இதுநாள் வரையில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது அதற்கு மாற்றாக நிதி ஆயோக் திட்டம் இந்திய அரசு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே கிராம மக்கள் தங்களின் கிராமத்திற்கு தேவையான சுகாதார வசதி குறித்தும், கிராமத்தில் உள்ள மாணவர்களின் எதிர்கால கல்விக்கு தேவையான கட்டமைப்பு வசதி குறித்தும், வேளாண்மைக்கு தேவையான புதிய தொழில்நுட்ப வசதி குறித்தும், கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடுவதற்கு தேவையான வசதி குறித்தும் மற்றும் கிராமத்தை நகர்புறமாக மாற்றிடும் வகையில் அனைத்து நகர்புற வசதிகளையும் பெற்றிட தேவையான 5 வசதிகள் குறித்தும் இந்த வசதிகளை பெற்றிட ஏதுவாக இந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கிராம மக்களின் மேலான ஆலோசனைகளை பெற்று அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக அறிக்கையாக இந்திய அரசுக்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒவ்வொரு 3 ஆண்டுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வளர்ச்சி பணிகள் முழுவதும் வரும் 2032 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே வேலூர் மாவட்டத்தல் உள்ள அனைத்து கிராம மக்கள் தங்களின் கிராமத்தை வளர்ச்சியடைந்த கிராமமாக செய்திட தகுந்த ஆலோசனைகளை தெரிவிக்கவேண்டும்.கோடைகாலத்தில் வேலூர் மாவட்டத்தில் வறட்சி ஏற்படும் என கருதி தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே பொதுமக்கள் ஆகிய நீங்கள் தற்போது இருக்கும் தண்ணீரை வீணாக்கமல் சேமித்து உபயோகப்படுத்திட வேண்டும். இவற்றை மக்கள் உணர்ந்து செயல்படவேண்டும். மேலும் இந்த கிராம சபா கூட்டத்தில் சுகாதார துறையின் மூலம் பல்வேறு நோய் தடுப்பு முறைகள் குறித்தும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. தனிநபர் கழிப்பறை அமைப்பதின் அவசியம் குறித்தும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. தனிநபர் கழிப்பறைகளை அரசே கட்டவேணடு;ம் என எதிர்பார்க்காமல் அரசு விதிகளின்பட கழிப்பறைகளை கட்டவிட்டு அதற்கான செலலினங்களை உரிய அதிகாரிகளிடம் வங்கிகள் மூலம் பெற்றகொள்ளலாம்.

வனத்துறை சட்ட விதிகளின்ப்படி 25 ஆண்டுகளுக்கு மேல் மலைவாழ் மக்கள்இ பழங்குடியின மக்கள் பயன்பாட்டில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கான பட்டா பெற முறையாக விண்ணப்பித்தால் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். தனியார் பள்ளிகளில் 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள நலிந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 25மூ இடம் ஒதுக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இவற்ற்றை உணர்ந்து அரசு எந்த நோக்கத்திற்காக திட்டங்களை செயல்படுத்துகிறதோ அதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன்இஇ.ஆ.ப.இ அவர்கள் பேசினார்.

இவ்விழாவின் முடிவில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.சிறப்பு கிராம சபா கூட்டத்தில் திருப்பத்த}ர் சார் கலெக்டர் கார்த்திகேயன், இ.ஆ.ப., ; மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் தேஐஸ்வி,இ.வ.ப., மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி, புதுவாழ்வு திட்ட உதவி அலுவலர் ;தணிகைவேல,; வட்டாட்சியர்கள்;,; வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,; மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்