முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி குட்செப்பர்டு பினிசிங் பள்ளியில் ஆடை அலங்கார அணிவகுப்பு

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி குட்செப்பர்டு பினிசிங் பள்ளியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

40 மாணவியர்

ஊட்டியை அடுத்துள்ள எம்.பாலாடா பகுதியில் செயல்பட்டு வரும் குட்செப்பர்டு சர்வதேச பள்ளியின் ஒரு அங்கமாக குட்செப்பர்டு பினிசிங் பள்ளி இயங்கி வருகிறது. 10 மாத கால கல்வித் திட்டத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த 40 மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆண்டு இறுதியில் இவர்களுக்காக ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகளுக்காக மாணவியர் தாங்கள் வடிவமைத்த பல்வேறு விதமான ஆடைகளை அணிந்தவாறு மேடையில் ஒய்யரமாக நடந்து வந்து அழகினை வெளிப்படுத்தினர்.

மான் போன்ற உடலமைப்பு

இதில் காகித பூக்களினால் வடிவமைக்கப்பட்ட மயில் ஆடையும், மான்போன்ற உடலமைப்பு ஆடையும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. மேலும் குளிர்கால ஆடை, கோடை கால ஆடை, பனிப்பிரதேச ஆடை என வண்ண வண்ண ஆடைகள் அணிந்தும் அசத்தினர்.
இவ்விழாவில் பியர் அடிமிரல் சர்ஜன் டாக்டர் நிர்மலா கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது வைஸ் அடிமிரல் கண்ணன், குட்செப்பர்டு சர்வதேச பள்ளி முதல்வர் டாக்டர் பி.சி.தாமஸ், பினிசிங் பள்ளி முதல்வர் எலசம்மா தாமஸ், டீன் நீத்தா நடராஜ் ஆகியோர் உடனிருந்தனர். விழாவில் பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்