முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய நிலங்கள், மண்பாண்டம் செய்பவர்கள் மற்றும் செங்கல் சூளை பயன்பாட்டிற்க்கு ஏரிகளிலிருந்து மண் எடுக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது: கலெக்டர் வா.சம்பத் தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலர் கூட்டரங்கில் விவசாய நிலங்கள், மண்பாண்டம் செய்பவர்கள் மற்றும் செங்கல் சூலை பயன்பாட்டிற்க்கு ஏரிகளிலிருந்து இலவசமாக மண் எடுக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று (02.05.2017) கலெக்டர் வா.சம்பத் தலைமையில் நடைபெற்றது . இது குறித்து கலெக்டர் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததாவது.

 

 

கனிம சலுகை

சேலம் மாவட்டத்தில் 1959-ம் வருட தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமபிப்பில் உள்ள கண்மாய், குளம், ஏரிகளில் தூர்வாரி மண், கிராவல் எடுத்துச்செல்ல தகுதி வாய்ந்த கண்மாய்களின் பட்டியல்களை தயார் செய்து மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்பட்டுள்ளது. அவற்றில் பொது பணிகள் துறை ஏரிகள் 36, பேரூராட்சிகள் 07, ஊராட்சிகள் 258, என மொத்தம் - 301 ஏரிகள் தகுதிவாய்ந்ததாக அரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரிகளிலிருந்து கட்டணமில்லாமல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் மனுதாரரின் குடியிருப்பு அல்லது விவசாய நிலம் ஆகியவை அந்த வருவாய் கிராமம் அல்லது அதனை ஒட்டியுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும். மனுதாரர்கள் அடங்கல் பதிவேட்டின்படி விவசாய தேவைக்காக சம்மந்தப்பட்ட ஏரியிலிருந்து மண் வெட்டியெடுத்து பயன்படுத்த கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இருவகையான விவசாய நிலங்களுக்கு மண் வெட்டியெடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. நன் செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 185 கனமீட்டர் அளவும் புன் செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் அளவும். இதர சொந்த பயன்பாட்டிற்கு ஒரு நபர்களுக்கு 30 கனமீட்டர் (10 டிராக்டர்) வழங்கப்படும். மண் பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் வழங்கப்படும். இவ்வாறு விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் 20 நாட்களுக்கு மிகாமல் அனுமதி வழங்கப்படும்.நன் செய் மற்றும் புன் செய் நில விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மண் எடுக்க அனுமதிக்கப்படுவார். பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆகியோரால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே மண் வெட்டியெடுக்க அனுமதி வழங்கப்படும். மனுதாரர்களால் கொண்டு வரப்படும் வாகனத்தில் சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சி துறை அல்லது பஞ்சாயத்து துறையினர்களால் உரிமம் வழங்கப்பட வேண்டும்.

குழிகள், கரையின் அடிப்பகுதியிலிருந்து கரையின் உயரத்தைப் போல் குறைந்தது இரண்டு மடங்கு தொலைவில் அமைந்திருத்தல் வேண்டும் மற்றும் அவை (குழிகள்) 1 மீட்டர் ஆழத்திற்கு மேல் இருக்கக்கூடாது. குழிகள் 1 மீட்டர் ஆழத்திற்கு அமையும் போதும் அவை துளைகள் கொண்ட பாறை படிவங்களை வெளிப்படுத்துவதாக இருக்குமாயின் அவற்றின் ஆழம் 1 மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஏரிக்கரை நெடுகிலும் அங்கீகரிக்கப்பட்ட சாலை அல்லது வண்டிப்பாதை அமைந்திருந்தாலன்றி, மற்றபடி ஏரிக்கரைகளை பாதையாக பயன்படுத்தி மண் எடுத்துச்செல்லக்கூடாது. மண்ணை வெளியே எடுத்துச் செல்ல உதவும் வகையில் கரைகளை வெட்டி சேதப்படுத்தி பாதை அமைக்கக்கூடாது.பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆகியோரால் மண் வெட்ட எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே மண் வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படும். ஏரியின் கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி ஒரே சீராக மண் எடுக்கப்பட வேண்டும். பாசன மடையின் அடிமட்டத்திற்கு கீழ் மண் எடுக்க அனுமதி இல்லை. மண்எடுக்க அனுமதிக்கப்பட்ட பாதையை தவிர வேறு பாதையில் மண் எடுக்க அனுமதி இல்லை. ஏரியின் கரையை சேதப்படுத்தினார் மனுதாரர் சொந்த செலவில் சரிசெய்து கொடுக்க வேண்டும். ஏரியில் எடுக்கப்படும் மண்ணை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை சீரமைக்க மண் எடுக்க அனுமதி இல்லை. ஏரியில் இரவு நேரங்களில் மண் எடுக்க கூடாது. காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும்.

ஏரியில் உள்ள மரங்களை சேதப்படுத்தக்கூடாது. மண் எடுக்கும்போது கரை மற்றும் கட்டுமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது. நீர்பிடிப்பு இல்லாத காலங்களில் மட்டுமே விவசாயத்திற்கு மண் எடுக்க அனுமதி அளிக்கப்படும். மதகுகள் இருக்கும் இடங்களில் கரையிலிருந்து 100 மீ தள்ளி மண் எடுக்கப்பட வேண்டும். மனுதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவசாய நிலத்தின் புல எண்கள் தவிர பிற இடங்களுக்கு மண் எடுத்துச் செல்ல கூடாது. மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களை கொண்டு மண் எடுக்கும்போது ஓட்டுநர் உரிமம் பெற்ற ஓட்டுநர்களால் மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். கண்மாயின் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் முற்றிலும் இல்லாத காலங்களில் மட்டும் தான் மண் எடுக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு துணை இயக்குநர் கனிமவளத்துறை அறை எண். 206, தொலைபேசி எண். 0427-2419283 என்ற முகவரிக்கு தொடர்புக்கொள்ளலாம் என கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மேட்டூர் சார் கலெக்டர் மேநாதரெட்டி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், கனிமவளத்துறை இயக்குநர் அ.ஆருமுக நாயனார் மாவட்ட கலெக்டர் நேர்முக விஜய்பாபு, வருவாய் கோட்டாட்சியர்கள் பால் பிரின்ஸ்லி ராஜ் குமார், செல்வன், குமரேஸ்வரன் உதவி இயக்குநர் ஊராட்சிகள் தெய்வசிகாமனி, மகளிர் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், பொது பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்