எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை - சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பில் 62 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற 22 திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று துவக்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 24 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 20 நிறைவுற்ற திட்டப் பணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை - காட்டுபுதுக்குளத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி - சென்னை
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். மேலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில் 3 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்; பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இராயபுரம் மண்டலத்தில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை உருது பெண்கள் நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள்; திரு.வி.க.நகர் மண்டலத்தில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நல மருத்துவமனை மற்றும் வெங்கடா சமாதி தெருவில் 1 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள்; தேனாம்பேட்டை மண்டலம்-மெக்காபுரம் பிரதான சாலையில் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்; வளசரவாக்கம் மண்டலம்-காரம்பாக்கம் பொன்னி நகரில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 150வது வார்டிற்கு கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடம்; அடையாறு மண்டலம்-மடுவன்கரை ஐந்து பர்லாங் சாலையில் 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் 174வது வார்டிற்கு கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடம்;
திருச்சி - திண்டுக்கல்
சோழிங்கநல்லூர் மண்டலம்-நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்; நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை நகராட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்; திண்டுக்கல் மாநகராட்சியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உயிரி எரிவாயு கலன்; கடலூர் நகராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடற்றவர்களுக்கான இரவு தங்கும் விடுதி; பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துப்புரவு பணியாளர் குடியிருப்பு வளாகம்;
நாமக்கல் - நெல்லை
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி; வேலூர் மற்றும் சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடைகள்; நாமக்கல் மாவட்டம், மோகலூர் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கடைகள்; திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள பாலம்; திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை மற்றும் திருவேங்கடம் பேரூராட்சிகளில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடங்கள்; திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் பேரூராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம்; என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 61 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற 21 திட்டப்பணிகள்;
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை நகரம் – காட்டுபுதுக்குளத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம்; என மொத்தம் 62 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 நிறைவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.