முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை

ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2025      இந்தியா
India-China 2024-10-25

Source: provided

புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் இந்திய எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி அத்துமீறலில் ஈடுபட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்தில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை என்ற தகவல் களத்தில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

போர் பதற்றத்தை அடுத்து முன்னெச்சரிக்கை கருதி இந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தடைகளும் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று காலையில் திரும்ப பெற்றுள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

நேற்று (மே 11) காலை முதல் ட்ரோன் தாக்குதல், குண்டு வீச்சு போன்ற எந்தவித தாக்குதலும் இந்தியா - பாகிஸ்தானின் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள பகுதிகளில் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இதை மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் போலீஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக ட்ரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல், குண்டு வீச்சு போன்றவற்றை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் எதிர்கொண்டன. பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல் முயற்சியை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டது. அதை சமாளிக்க நேற்று முன்தினம் இரவும் இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை முதலே எந்தவித தாக்குதலும் இந்திய எல்லையில் நடைபெறவில்லை என தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உதம்பூர், சம்பா, ரஜோரி, ஜம்மு, உரி, அக்னூர், ஸ்ரீநகர், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், பதன்கோட், பெரோஸ்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு படை எதிர் தரப்பின் நடவடிக்கையை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து