முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் 5 ‘முக்கிய’ பயங்கரவாதிகள் பலி

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Operation-Sindhoor-2

புதுடெல்லி, கடந்த 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய ஆயுதப்படைகள், கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின.

இதில், பஹவல்பூரில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மையம், முரிட்கே பகுதியில் இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தளம் ஆகியவையும் அடங்கும். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொஹமது ஆகியவற்றின் முக்கிய நபர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருப்பார்கள் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில், கொல்லப்பட்டவர்களில் 5 பேர் முக்கிய பயங்கரவாதிகள் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (மே 10) உறுதிப்படுத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் முடாசர் காதியன் என்பவரும் ஒருவர்.  மேலும் மசூத் அசாரின் இரண்டு  மைத்துனர்களும் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் ஹபீஸ் முகமது ஜமீல். இவர், அந்த அமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளை நிர்வகித்து வந்துள்ளார். மற்றொருவர், 1999 ஐசி-814 விமானக் கடத்தலுக்காக தேடப்படும் முகமது யூசுப் அசார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 4-வது முக்கிய நபர், லஷ்கர் இ தொய்பா தளபதி காலித்.  ஐந்தாவது நபர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது ஹசன் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து