முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி குருசடி திருத்தலத்தில் 84-வது ஆண்டு விழா

புதன்கிழமை, 3 மே 2017      நீலகிரி

ஊட்டி காந்தல் குருசடி திருத்தலத்தில் 84_வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி

தென்னத்தில் கல்வாரி என்றழைக்கப்படும் ஊட்டி, காந்தல் பகுதியில் அமைந்துள்ள குருசடி ஏசு திருத்தலத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 3_ந் தேதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டு வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பீட்டர், முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் மற்றும் 20 குருக்கள் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினர். 

பல்லாயிரக்கணக்கானோர்         

இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் ஒரு பகுதி இத்திருத்தலத்தில் இருப்பதால் ஆண்டுதோறும் இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அதேபோன்று இந்தாண்டும் இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக மாலை 5 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. திருத்தலத்திலிருந்து துவங்கிய ஊர்வலம், குருசடி காலனி, முக்கோணம் வழியாக பென்னட் மார்க்கெட் வரை சென்று மீண்டும் திருத்தலத்தை இரவு 8 மணிக்கு அடைந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் குருசடி திருத்தல பங்குத்தந்தை பீட்டர் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago