முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்கள் அரசு விருதுக்கு தேர்வு: கலெக்டர் மு.ஆசியா மரியம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 மே 2017      நாமக்கல்
Image Unavailable

 

சேலம் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது வழங்குவதற்கான தேர்வுக்குழு கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (04.05.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த 10 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது என கலெக்டர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

விருதாளர் தேர்வு

தமிழ்நாட்டில் கலைப்பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்கள் வாயிலாக கலைத்துறையில் சாதனைப்படைத்த 18 வயது அதற்குட்பட்டோருக்கு "கலை இளமணி" 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு "கலை வளர்மணி" 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு "கலை சுடர்மணி" 51 வயது முதல் 60 வயது பிரிவினர்க்கு "கலை நன்மணி" 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்க்கு "கலை முதுமணி" என வயதுக்கு தக்கவாறு விருதுகள் வழங்க கலெக்டர் மு.ஆசியா மரியம் ஆணையிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கலை விருதாளர்கள் தேர்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மு. ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சேலம் மண்டல உதவி இயக்குநர் பா.ஹேமநாதன் விருதாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, சுற்றுலா அலுவலர் கோ.சிவக்குமார், முதன்மைக் கல்வி நேர்முக உதவியாளர் கே.மணிவண்ணன், நாதசுர கலைஞர் கலைமாமணி திருமதி தெய்வகுஞ்சரம், தவில் கலைஞர் கலைமாமணி சேந்தமங்கலம் ஆ.மணிகண்டன், ஜவகர் சிறுவர் மன்றத் திட்ட அலுவலர் திரு, தில்லை.சிவக்குமார், நாடக நடிகை கலைமாமணி திருமதி டி.வி.ஏ.விஜயகுமாரி ஆகியோர் கலந்து கொண்டும் கலை விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கலை விருதுகள்

கலை முதுமணி விருது தேவாரபாடகர் திருச்செங்கோடு டி.எம்.சுந்தரகுருக்கள், நாதசுரக்கலைஞர் சிங்களாந்தபுரம் எம்.ஆர்.கணேசன் கலை நன்மணி விருது சிலம்பக் கலைஞர் பொத்தனூர் ரா.பொன்னுசாமி, வீணை இசைக் கலைஞர் திருச்செங்கோடு ஜி.கே.மயிலாம்பிகா கலைச்சுடர்மணி விருதுக்கு ஓவியக்கலைஞர் ரா.நிர்மலா தப்பாட்டக்கலைஞர் செல்லப்பம்பட்டி ம.சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கலை வளர்மணி விருது மரக்கால் ஆட்டக்கலைஞர் நன்செய் இடையார் ச.சரவணன், தவில் கலைஞர் ராசிபுரம் பி.வெங்கடேசன் ஆகியோரும் கலை இளமணி செல்வி எம்.தேவயாணி (பரதம்) செல்வன் செ.சுரேந்தர் (தெருக்கூத்து) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்