முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

வியாழக்கிழமை, 4 மே 2017      அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் சிறுபான்மையினர்களாக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தமத்தினர், பார்சியர்கள், மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் புதிதாக தொழில்கள் துவங்கிடவும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்யவும் கடன் உதவிகள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

கடனுதவி

இக்கடன் உதவிகள் பெறுவதற்கு வயது வரம்பு 18 ஆகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் உதவி வழங்கப்படும். இக்கடன் தொகை பெறுவதற்கு பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் நகர்புறத்தில் வசிப்பவராக இருப்பின் ரூ.1,03,000- க்கு மேற்படாமலும், கிராமபுறத்தில் வசிப்பவராக இருப்பின் ரூ. 81,000- க்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

தனி நபர் கடன் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு ரூ.50,000- முதல் அதிகபட்சம் ரூ.30,00,000- வரை ஆண்டிற்கு 5சதவீதம் முதல் 8சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். கடன் தொகையில் பயனாளியின் பங்கு 5சதவீதம் ஆகும்.சிறுபான்மையின பெண்கள் ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு கடன்; வழங்கப்படுகிறது. இக்குழு குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் சேமித்தல் மற்றும் உள் கடன் போன்றவற்றில் ஈடு;பட்டு இருக்க வேண்டும். சுய உதவி குழுவின் 60மூ அங்கத்தினர்கள் சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும். ஏனைய 40 சதவீத உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இடம் பெற்றிருக்காலம். குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ.1.00 இலட்சம் கடனுதவி 7சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழில் கல்வி தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு கல்வி கடன் ஒரு வருடத்திற்கு அதிகப்பட்சமாக ரூ.3.00 இலட்சம் வரை ஆண்டிற்கு 3சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.மேற்படி கடன் திட்டத்தில் மான்யம் ஏதும் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டிய ஆவணங்கள் :- 1. வருமான சான்றிதழ், 2. சார்ந்துள்ள மதத்திற்கான சான்றிதழ், 3. ஆதார் அட்டை நகல், 4. குடும்ப அட்டை இருப்பிடசான்றிதழ், 5. கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம் திட்ட அறிக்கை 6. ஓட்டுநர் உரிமம் நகல் (போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டும்), 7. கூட்டுறவு வங்கி கோரும் ஆவணங்கள் இக்கடனுதவிக்கான விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கட்டணமின்றி பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து சான்றுகளுடன் அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்