முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி: அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தனர்

வெள்ளிக்கிழமை, 5 மே 2017      கடலூர்
Image Unavailable

 

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்கள்.

நலத்திட்ட உதவிகள்

இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.6,710- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.9,120- மதிப்பிலான சலவைப்பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 4 பயனாளிகளுக்கு ரூ.16000- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 6 சட்டப்பட்டதாரிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான ஊக்குவிப்பு தொகைகளையும், மார்ச்-2016 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டாமிடம் பெற்ற ஒரு மாணவருக்கு ரூ.20000-க்கான ரொக்கப்பரிசினையும், மீன்வளத்துறை சார்பாக ரூ.2,41,000- மதிப்பில் 10 மீனவர்களுக்கு மானியத்துடன் 7எச்பி குதிரை திறன் கொண்ட படகுக்கான மோட்டார்களையும், 2015-16ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 14 மீனவ மாணவ மாணவியர்களுக்கு ரொக்கப்பரிசுகளையும், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2,70,000- மதிப்பிலான அம்மா ஆட்டோவினையும், விளையாட்டுத்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு ஓடி விளையாடு பாப்பா திட்டத்தின் கீழ் ரூ.7,50,000- மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 1 பயனாளிக்கு ரூ.3,20,000- (அரசு மானியம் ரூ.75,000-) மதிப்பிலான மினி டிராக்டரையும், வேளாண்மைத்துறை சார்பாக 20 பயனாளிகளுக்கு ரூ.21,343- மதிப்பிலான இடுபொருடகளையும், வருவாய்த்துறை சார்பாக 11 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வழங்கக்கூடிய விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட வழங்கல் துறை சார்பாக 25 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 5 காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களுக்கு ரூ.92,000- மதிப்பிலான ரொக்கப்பரிசுகளையும் என 97 பயனாளிகளுக்கு ரூ.18,12,173- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், வரவேற்புரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன் நன்றியுரையாற்றினார். இப்பொருட்காட்சியானது 45 நாட்கள் நடைபெறும். இப்பொருட்காட்சியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம் சிறுவர்களுக்கு ரூ.10-ம், மாணவ மாணவியர்களுக்கு ரூ.5.-மாக வசூலிக்கப்படுகிறது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது,

அமைச்சர் பேச்சு

கடலூர் நகருக்கு எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் கூட ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆட்சி செய்தபோது கடலூர் கோட்டையை மையப்படுத்தி இங்கே தலைநகராக கொண்டுதான் இராஜ்யத்தை ஆண்ட வரலாறு கடலூருக்கு உண்டு. அந்த நேரத்தில்தான் ஆங்கிலேயர்களால் கடலூர் துறைமுகம் நாட்டிலேயே சிறந்த துறைமுகமாக உருவாக்கப்பட்டது. அவ்வளவு சிறப்புமிக்க கடலூரிலே இன்று அரசுப் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2011-16 வரை நடைபெற்ற அம்மா அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் பொற்கால முதல்வராக இருந்து தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதன் பயனாக மக்களை மட்டுமே நம்பி தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சகாப்தம் படைத்து வெற்றிப்பெற்று மீண்டும் அம்மா முதல்வராகி சாதனை படைத்தார்கள்.

தொடரும் அம்மாவின் அரசு

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூடிய கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அம்மா கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன், சொல்லாத திட்டங்களையும் தந்துள்ளேன், மீண்டும் சட்டமன்றம் கூடும்போது நான் தமிழக மக்களால் முதலமைச்சராக வெற்றிப்பெற்று இங்கு வருவேன், இந்த ஆட்சியே தொடரும் என்று சொல்லி தேர்தலை சந்தித்தார்கள். இதற்கு அம்மா அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கை மற்றும் தையரித்தால்தான் மீண்டும் வெற்றிப்பெற்று வரலாறு படைத்தார்கள். மேலும் அக்கூட்டத்தில் அம்மா நான் இருக்கும்வரையிலும் எனக்கு பிறகும் இந்த ஆட்சியே தமிழகத்தில் இனி தொடர்ந்து நடைபெறும் என்று சொன்னார்கள். அவர்களின் வாக்கு மெய்பிக்கப்படும் வகையில் அம்மாவின் அரசு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

5 திட்டங்களுக்கு கையெழுத்து

அம்மா தேர்தலில் வெற்றிப்பெற்று பதவியேற்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஐந்து திட்டங்களுக்கு பதவியேற்ற அன்றே கையொப்பமிட்டு செயல்படுத்தி வந்தார்கள். அதேபோல் தற்போதைய தமிழக முதலமைச்சர் அவர்களும் அம்மா அவர்களின் வழியில் பதவியேற்ற அன்றே ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டு செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்படும் என்று சொன்னார்கள். அதன்படி தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி வந்தார்கள். மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசு மூலமாக டிஜிட்டல் உரிமையை பெற்று தருவேன் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். இன்று அம்மா அவர்களின் இலட்சியம் மற்றும் கனவு நிறைவேறும் வகையில் அரசு மத்திய அரசு மூலம் இந்திய துணை கண்டத்திலேயே தமிழ்நாட்டில்தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த அரசு அம்மாவின் அரசு என்பதை நிருபித்து நல்லாட்சி நடத்தி வருகிறது என்பதை இங்கு பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறாக அரசு துறைதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு நகரங்களிலும் பொருட்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூரில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல் அரசின் திட்டங்கள் என்னென்ன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிகின்ற ஒரு மகத்தான சாதனமாக இந்த பொருட்காட்சி விளங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago