முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 8 மே 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல்வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டாஇ மாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகைஇ காவல்துறை பாதுகாப்புஇ மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 412 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முதன்மை மதிப்பெண்

இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2016 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதன்மை மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 5 மாணவ மாணவிகளுக்கு ரூ.1,05,000- மதிப்பில் பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2016-2017 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற செவித்திறன் குறைபாடுடைய 6 மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் விடுதி கட்டணம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.59,500 மதிப்பில் பரிசுத்தொகை, பாடப்புத்தகம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான காசோலைகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நக்கர நாற்காலிகளையும், தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பில் நிதியுதவிகளையும் ஆக மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.3,64,500- மதிப்பிலான நிதியுதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.

இக்கூட்டத்தில்; மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) ஜெயபிரகாஷ், சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்