முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டல் மண் சவுடுமண் கிராவல் கனிமங்களை இலவசமாக எடுத்து விநியோகம் செய்யும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 10 மே 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் -விருதுநகர் மாவட்டம் கனிமவளத்துறையின் மூலமாக, விருதுநகர் வட்டத்தில்;; ஒண்டிப்புலி கண்மாயிலும், சாத்தூர் வட்டத்தில் மேலமடை கண்மாயிலும், விவசாயம்   வீட்டு உபயோகம்  மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண்  சவுடுமண்  கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து விநியோகம் செய்யும் பணியினை   மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், இன்று(10-05-17) தொடங்கி வைத்தார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறை பராமரிப்பில் இயங்கும் 431 ஏரி  கண்மாய்  குளம் ஆகியவற்றிலிருந்து  விவசாயம்   வீட்டு உபயோகம்  மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண்  சவுடுமண்  கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு அரசின் மூலமாகவே, எடுத்து பொதுமக்களின் பயன்பாட்;;டிற்கு விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயம் வீட்டு உபயோகம்  மண்பாண்டம் செய்வதற்கு மண் தேவையாக உள்ளது என்று விண்ணப்பித்துள்ள விண்ணப்பதார்களின் மனுக்கள்  பரிசிலனை செய்து , பின்னர் அவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்ட அளவில் இலவசமாக, கனிமங்கள் விநியோகம் செய்யப்படும். மண் எடுப்பதன் மூலம் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்ற நீர்ஆதாரப்பகுதிகளை தூர்வாரி அதனை அதிகப்படுத்தி, கண்மாயிகளை ஆழப்படுத்தி கரைகள் உயர்த்தப்படும்.

மேலும், வரும் பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க ஏதுவாக அமையும். இதன் மூலமாக விவசாயத்தை பெருக்கி மண்வளம் காத்து பசுமைப்பரட்சியை ஏற்படுத்து முடியும் என்றும், மேலும், விவசாயம்   வீட்டு உபயோகம்  மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண்  சவுடுமண்  கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து  பயன்படுத்த விரும்பும் நபர்கள் தங்கள் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி  கண்மாய்  குளம் அல்லது அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஏரி  கண்மாய்  குளம்  குறித்த  கிராம கணக்குகளுடனும், மற்றும்; உரிய ஆவணங்களுடனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றும் பெற்று மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின் போது, உதவிப்பொறியாளர் (வைப்பாறு கோட்டம்) பவளக்கண்ணன், வட்டாட்சியர்(விருநகர்) சையது இப்ராஹிம் ஷா, வட்டாட்சியர்(சாத்தூர்) திருமதி.முத்துலட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்