முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காடையாம்பட்டி மனுநீதி திட்ட முகாமில் 150 பயனாளிகளுக்கு ரூ26.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

புதன்கிழமை, 10 மே 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கே.மேரூரில் மனுநீதி திட்ட முகாம் நேற்று (10.05.2017) கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இம்மனுநீதி திட்ட முகாமில் கலெக்டர் வா.சம்பத் பேசியதாவது,

நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய திட்டங்கள் அனைத்து மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் உள்ள மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மாதம் தோறும் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அரசு முதன்மை அலுவலர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் அரசின் திட்டங்களை அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியுடைய மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் வேளாண்மைத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேலைவாய்ப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, தொழில் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் என அனைத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பயன்பெறும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இன்றைய மனுநீதி திட்ட முகாமில் இந்திரா காந்தி விதவை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.6,000ம், முதியோர் உதவித்தொகை 7 பயனாளிகளுக்கு ரூ.7,000ம், விதவை உதவித்தொகை 1 பயனாளிக்கு ரூ.1,000ம், புற்றுநோய் மற்றும் காசநோய் உதவித்தொகை 7 பயனாளிகளுக்கு ரூ.7,000ம், மின்னணு குடும்ப அட்டை 59 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப்பட்டா 13 பயனாளிகளுக்கு ரூ.65,000ம், வாரிசு சான்று 8 பயனாளிகளுக்கும், சிறு விவசாயி சான்று 4 பயனாளிகளுக்கும், சாதிச்சான்று 13 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறை மானியம் 2 பயனாளிகளுக்கு ரூ.76,413ம், வேளாண்மைத்துறை மானியம் 6 பயனாளிகளுக்கு ரூ.47,394ம், தையள் இயந்திரம் 5 பயனாளிகளுக்கு ரூ.16,775ம், சலவைப்பெட்டி 5 பயனாளிகளுக்கு ரூ.23,250ம், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் 2 பயனாளிகளுக்கு ரூ.3,60,000ம், பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.20,40,000ம், என மொத்தம் 150 பயனாளிகளுக்கு ரூ.26,49,832 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், பேசினார்.

இம்மனுநீதி திட்ட முகாமில் இணை இயக்குநர் வேளாண்மை சௌந்தரராஜன், மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன், துணை கலெக்டர் சமூகபாதுகாப்பு திட்டம் ஜவகர், மாவட்ட மாற்றுத்திரனாளிகள் நல தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தரம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரைமுருகன், துணை இயக்குநர் சுகாதார பணிகளின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், வட்டாட்சியர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்