முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில் தேர் திருவிழா: ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 10 மே 2017      விழுப்புரம்
Image Unavailable

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில் தேர் திருவி்ழா செவ்வாய் அன்று நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

 10 நாள் உற்சவம்

செஞ்சிக்கோட்டையின் மலை மீது அமைந்துள்ள கமலக்கன்னி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் 10 நாள் உற்சவம் நடைபெறுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன், மகாமாரியம்மன், கோட்டை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு 10 நாள் உற்சவ திருவிழா கடந்த 1-ம்தேதி் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதில் தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.

தேரோட்டம்

9-ம் நாள் திருவிழாவான தேர்த்திருவிழா செவ்வாய் அன்று நடைபெற்றது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 3 மணி அளவில் அலங்கரிப்பட்ட புதிய தேரில் ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீமகாமாரியம்மன் ஆகியோர் தேரினில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை பீரங்கிமேடு, எம்ஜிஆர் நகர் கிராம மக்கள் மற்றும் கோயில் உபயதாரர்கள், கமலக்கன்னி அம்மன் கோயில் அறங்காவலர் அரங்க.ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago