ஊட்டி ரோஜா பூங்காவில் 15-வது ரோஜாகண்காட்சி நாளை துவக்கம்

வியாழக்கிழமை, 11 மே 2017      நீலகிரி
11ooty-1

ஊட்டி ரோஜா கண்காட்சி நாளை (13_ந் தேதி) துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
                                    30 ஆயிரம் ரோஜா செடிகள்
அரசு தாவரவியல் பூங்காவின் 100_வது மலர்காட்சியையொட்டி விஜயநகரம் பகுதியில் அமைக்கப்பட்டது அரசு ரோஜா பூங்கா. இப்பூங்காவானது 5 படி மட்டங்களில் ஹைபிரீட் டீ, புளோரிபண்டா, மினியேச்சர், பாலியந்தா, கிரீப்பர்ஸ் என 5 வகையிலான ரோஜா இனங்களிலிருந்து 3, 800 ரகங்களைக்கொண்ட 30 ஆயிரம் ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டு தற்போது நன்றாக பூத்துக்குலுங்குகின்றன.
                                 15_வது ரோஜா காட்சி
ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 15_-வது  ரோஜா காட்சி நாளை(13_ந் தேதி) ரோஜா பூங்காவில் காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. நீலகிரி கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் நடைபெறும் விழாவில் தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர் ஆனந்த்குமார்
கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியானது 14_ந் தேதி வரை இரண்டு நாட்கள் நடக்கிறது.
                                           பரதநாட்டியம் அலங்காரம்
இக்கண்காட்சியில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 25 ஆயிரம் ரோஜா மலர்களைக்கொண்டு பரதநாட்டியம் அலங்கார வடிவம் மற்றும் செல்பி போட்டோ ஸ்டால் ஆகியவை கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட உள்ளது. சிறந்த ரோஜா தோட்டங்கள் மற்றும் பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் ரோஜா மலர்செடிகள், ரோஜா ரகங்கள் சேகரிப்பு, கொய்மலர் ரோஜா வகைகள், வணிக ரீதியாக பயிர் செய்யப்படும் ரோஜா ரகங்கள், ரோஜா மலர்செண்டுகள், ரோஜா மாலைகள், ரோஜா இதழ்களிலிருந்து தயார் செய்யப்படும் பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. இக்கண்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படுகிறது.
ரோஜா கண்காட்சி நடைபெறும் இரண்டு நாட்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. எனவே வேறு எங்கும் காணக்கிடைக்காத பலவகையான ரோஜா ரகங்களைக்காண சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: