முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 தேர்வில் 96.77 சதவீதம் தேர்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      விருதுநகர்
Image Unavailable

 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் 96.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மேல்நிலை பள்ளிகளுக்கான அரசு பொதுத்தேர்வு 02.03.2017 அன்று தொடங்கி  31.03.2017 வரை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,339 மாணவர்கள், 8,497 மாணிவிகள் என மொத்தம் 15,836 மாணவ, மாணவியர்கள்  தேர்வு எழுதினார்கள். அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி துறையின் மூலம் மேல்நிலைப்பள்ளி அரசு பொதுத்தேர்வுக்கான முடிவுகள்; நேற்று வெளியிடப்பட்டது.  தேர்வு முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் 7,051 மாணவர்கள், 8,274 மாணவியர்கள் என மொத்தம் 15,325 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 96.77 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.  கடந்த ஆண்டு 95.04 சதவீதம் பெற்று மாநில அளவில் ஒன்பதாம் இடத்தில் இருந்தது.
 இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 96.07சதவீதம் ஆகவும் மாணவிகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 97.37சதவீதம்  ஆகவும் உள்ளது. மேலும் இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதமானது கடந்த ஆண்டை விட 1.73சதவீதம்   கூடுதலாகும்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 32 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 34 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம்  133 பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். அவற்றில்  23 அரசு பள்ளிகள், 9 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்  20 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 52 பள்ளிகளில்; மாணவ, மாணவியர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 27 பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அரசு பள்ளிகளைப் பொறுத்த வரையில் சென்ற ஆண்டை விட இவ்வாண்டில் 15 அரசு பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் 96.77சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் பெற்றமைக்காக மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், இத்தகைய முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்த ஆசிரிய, ஆசிரியைகளையும், மாணவ, மாணவிகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  இந்நிகழ்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர்கள் கே.ராமர் (ராமநாதபுரம்), டி.பாலசுப்பிரமணியன் (பரமக்குடி) ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்