முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவுப்பொருட்கள் தரம் பற்றி புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ் ஆப் எண் அறிமுகம் கலெக்டர் சஜ்ஜன் சிங் ஆர். சவான் தகவல்

சனிக்கிழமை, 13 மே 2017      கன்னியாகுமரி

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுகள் பெறுவதற்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் விர்pப்புணர்வு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது. ஆண்டு ஒன்றுக்கு விற்றுக் கொள்முதல் ரூ.12 இலட்சத்திற்கு கீழ் வர்த்தகம் செய்யவும் உணவு வணிகர்கள் பொது இ.சேவை மையங்கள் மூலமாக பதிவுச் சான்று பெற்றுக் கொள்ளலாம். ரூ.12 இலட்சத்திற்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அல்லது அருகில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களையோ மாவட்ட அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

புகார் தெரிவிக்க

 உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 – ன் பழ உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுசான்று உணவு வர்த்தகத்திற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம், பதிவு சான்று பெற்று வர்த்தகம் செய்ய இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.மேலும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பற்ற தரம்குறைந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த உணவு வணிகர்கள் மீது இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவழக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பொருட்களின் தரம் குறித்தான புகார்களை தெரிவிக்க புதிய வாடஸ் ஆப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ளலாம்

எனவே கோடை காலமான தற்போது விற்பனை செய்யப்படும். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், தரம் குறைந்த குழநீர் கேன்கள், பால் மற்றும் பால் பொருட்கள், தயாரிப்பு தேதி மற்றும் பயன்பாட்டு தேதி குறிப்பிடாத உணவு பொட்டலங்கள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற "வாட்ஸ் ஆப்" எண்ணில் தெரிவிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு துறை, 36, சன்னதி தெரு, கிருசூணன்கோவில், நாகர்கோவில் என்ற அலுவலகத்தையோ, 04652 – 276786 என்ற தொலைபெசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்