ரேஷன் அட்டையின் ஸ்மார்டு கார்டு பெற இரு நாள் சிறப்பு முகாம்

சனிக்கிழமை, 13 மே 2017      சென்னை

 

கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ரேஷன் அட்டைக்கான ஸ்மார்டு கார்டு பெறாதவர்களுக்கான இரு நாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை துவங்கியது.

119 ரேஷன்கடைகள்

கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மொத்தம் 119 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 58ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளது. இந்த ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ஸ்மார்டு கார்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஸ்மார்டு கார்டுக்கான போதிய விவரங்களை தராமல் இருப்பவர்களுக்கு ஸ்மார்டு கார்டு வழங்கும் பணி தடைபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 119 ரேஷன் அட்டைகளிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஸ்மார்டு கார்டு பெறாதவர்கள் அவர்களது விவவரங்களான ஆதார் எண், தொலைபேசி எண், முகவரி, குடும்ப தலைவர் விவரம் உள்ளிட்டவைகள் ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் தந்து ஸ்மார்டு கார்டு பெற வழி செய்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை கும்மிடிப்பூண்டியில் ஏடூர், கண்ணம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வட்ட வழங்கல் அலுவலர் இளவரசி நேரில் ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: