முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டுத்தாவணி,பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தில் பேருந்துகள் சீராக இயக்கப்படுகின்றனவா அமைச்சர் செல்லூர்ராஜூ, கலெக்டர் ஆய்வு

திங்கட்கிழமை, 15 மே 2017      மதுரை
Image Unavailable

மதுரை.மே.-மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்துநிலையம், பெரியார் பேருந்துநிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தில் பேருந்துகள் சீராக இயக்கப்படுகின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்       கொ.வீர ராகவ ராவ் தலைமையில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர்.கே.ராஜு  அதிகாலை ஆய்வு மேற்கொண்டார்.
 இந்த ஆய்வின் போது   கூட்டுறவுத்துறை அமைச்சர்   செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
 போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் பேருந்துகளை சீராக இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
 மதுரை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தர வேண்டும்.  தமிழகஅரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் விஷமங்களை கூறி அரசியல் நடத்த மாற்றுக்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.  அவர்களின் தீய எண்ணம் மற்றும் நோக்கங்களை புரிந்த தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு உதவியாக இன்று பேருந்துகளை இயக்குகிறார்கள்.  இதனால் மதுரை மண்டலத்தில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  மற்ற பேருந்துகளும் வந்து கொண்டிருக்கின்றன. 
 100 சதவீதம் பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  போக்குவரத்து ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழல் இருக்குமோ, போக்குவரத்து தொழில் நடக்குமோ என்ற நிலைப்பாடு கடந்த 2006 முதல் 2010 வரை இருந்தது.  மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் 2011ல் டீசலுக்கு மானியம் வழங்கி, ஊழியர்களின் பணிநிரந்தரத்தை உறுதிப்படுத்தினார்.
 தற்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு கிடைத்துள்ளது.  எனவே இதனை உணர்ந்து மாற்று கட்சியினரின் எண்ணங்களுக்கு துணை போகாமல் மக்களுக்கு துணையாக பேருந்துகளை தொழிலாளர்கள் இயக்குகின்றனர் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்