மாவட்டத்திலேயே பொன்னேரி பணிமனையில் அதிக பேருந்துகள் இயக்கம்

திங்கட்கிழமை, 15 மே 2017      சென்னை
Pooneri 2017 05 15

தொ.மு.ச உள்ளிட்ட போக்குவரத்து சங்கங்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியிருத்தி நடைப்பெற்ற பணி நிறுத்த போராட்டத்தில் 7 சதவிகித அகவிலைப்படிஉயர்வு,நிலுவைத்தொகை ஆகியவை ஒரே தவணையில் வழங்கப்பட்டதை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பணிக்கு திரும்பியதை அடுத்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பணிமனையில் அதிக பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆய்வு

 தினசரி இயக்கப்படும் 36 பேருந்துகளில் 30 பேருந்துகள் காலை 9 மணிக்குள்ளாக இயக்கப்பட்டன.இதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன்,பொன்னேரி சப் கலெக்டர் தண்டபாணி,தனி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

உடன் பணிமனை அதிகாரிகள்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கோளூர் கோதண்டன், பொன்னுதுரை, உபயத்துல்லா, ஆறுமுகம், பழவை சந்திரசேகர்,மீஞ்சூர் தமிழரசன்,வழக்கறிஞர் விஜயகுமார், நாகராஜ், சம்பத், சலீம், சதா, ராதாகிருஷ்ணன், அருள், சவுக்கத் அலி, மேலூர் காந்தி, தாஸ், பழனி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: