மீஞ்சூர் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகளுக்கான அரசாணைகள் : எம்.எல்.ஏ.பலராமன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      சென்னை
Pooneri 2017 05 16

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்படுத்திய திட்டமான வீடு இல்லாத ஏழை எளியோருக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தின்படி தற்போதைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி முழு மானியத்துடனான தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசாணை

மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 40 பயனாளிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பிலான முழு மானியத் தொகுப்பு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தலைமையில்,கூட்டுறவு வங்கி நிர்வாகியும்,.தி.மு.க மீஞ்சூர் ஒன்றிய இணைச்செயலாளர் எம்.வி.சுந்தரம் முன்னிலையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்,மாவட்ட கழகச்செயலாளர் சிறுணியம் பலராமன் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு வீடுகள் பெறுவதற்கான அரசாணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் பத்மஜா ஜனார்தனம், பொன்னுதுரை ,பானுபிரசாத், ஆறுமுகம் வழக்கறிஞர்கள் திருமலை, மாரி, இளையராஜா, முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாங்கோடு மோகன், கொண்டக்கரை அமிர்தலிங்கம், மீஞ்சூர் விஜயன், நாப்பாளையம் காமராஜ்,நாலூர் முத்துக்குமார், அஸ்கர் அலி, எம்.ஆர்.பழனி, கடப்பாக்கம் ராஜா, மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பயனாளிகள் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: