சேஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை,எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      திருவள்ளூர்
Thiruvallur 2017 05 16

சேஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பழைய பண்ணூர்,திருமணிகுப்பம் ஆகிய கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழை,எளிய சிறுவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேஸ் தொண்டு நிறுவன இயக்குநர் வின்சென்ட்பால் தலைமையில் நடைபெற்றது.

புத்தகப்பைகள்

சேஸ் தொண்டு நிறுவன நிர்வாகிகள் ரேகா,லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிகுப்பம்,பழைய பண்ணூர் கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய இருளர் இன சிறுவர்கள் 80 பேருக்கு புத்தகப்பைகள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில்கள், ரப்பர், சார்ப்னர்கள், வண்ண கலர்பென்சில்கள் உள்ளிட்டவையும்,55 இருளர் இன மக்களுக்கு உடைகளையும் சேஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நிறுவன இயக்குநர் வின்சென்ட்பால் வழங்கினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: