சிப்காட், தனியார் சர்க்கரை ஆலைகளின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      கடலூர்
cud collector meetting 2017 05 16

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

 பணிகள் குறித்து ஆய்வு

இக்கூட்டத்தில் கலெக்டர் , கடலூர் மாவட்டத்தில் சிப்காட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிகளில் குளங்கள் தூர்வாருதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் ஆகியவை மூலம் அதன் சுற்றுவட்ட கிராமங்களில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்த விவரத்தினை உரிய அலுவலரிடம் விரைவில் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், விருத்தாச்சலம் கோட்டாட்சியர்  கிருபானந்தம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர்  விஜய லட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் கனகசபை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.சங்கர், சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், தனியார் சர்க்கரை ஆலையின் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: