முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் சிருங்கேரி சங்கராசார்ய சுவாமிகள் புனித நீராடி சிறப்பு பூஜை

புதன்கிழமை, 17 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்இமேஇ18:  சிருங்கேரி சங்கராசார்ய சுவாமிகள் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுள்ள கோடி தீர்த்தத்தில் புனித நிராடி பின்னர் சுவாமிஇஅம்மன் சன்னதியின் கருவரையில் சிறப்பு பூஜைகள் செய்து புதன் கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
 ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்தவதற்காக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வரர் ஐகத்குரு  சங்கராசார்யகள்  பாரதீ தீர்த்தமஹாஸன்னிதானம் மற்றும் விதுசேகர பாரதீ ஸன்னிதானம் ஆகிய சுவாமிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் ராமேசுவரம் பகுதிக்கு வருகை தந்தனர்.இவர்களை ராமேசுவரம் திருக்கோயில் சார்பாகவும்இ ராமேசுவரம்  சிருங்கேரி மடத்தின் சார்பாகவும் பூர்ண கும்பம் மரியாதை செலுத்திஇ  வரவேற்றனர்.அதன் பின்னர் சுவாமிகள் இருவரும் சிருங்கேரி மடத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டாவது நாளான புதன் கிழமை காலை 8.20 மணியளவில் சங்கராசார்ய சுவாமிகள் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.இவர்களை மரபு முறைப்படி திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் திருக்கோயில் மூத்த குருக்கள்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.பின்னர் சுவாமிகள் இருவரும் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள கோடிதீர்த்தக்கிணற்றில் புனித நீராடினார்கள்.பின்னர் ராமநாதசுவாமி சன்னதியின் கருவரைக்கு 9.05  மணிக்கு சென்று அங்கு அமைந்துள்ள சிவ லிங்கத்திற்கு மஞ்சள்இதேன்இபால்இபன்னீர் போன்ற 11 வகையான பொருள்களால் 45 நிமிடம் அபிஷேகங்களும்இசிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.பின்னர் தீபாராதனைகள் பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து அங்கிருந்து 9.50 மணிக்கு புறப்பட்டு பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியின் கருவரைக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர்.தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.பின்னர் சுவாமிகள் திருக்கோயிலில் தரிசனத்திற்காக வருகை தந்த பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ்இ திருக்கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்இ கண்காணிப்பாளர் ககாரீன்ராஜ்இராஜாங்கம்இபாலசுப்பிரமணியன்இகாசாளர் ராமநாதன்இஇணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்இதிருக்கோயில் பேஷ்கார்கள் அண்ணாதுரைஇ கலைச்செல்வம்இகண்ணன்இசெல்லம்இ  ராமேசுவரம் சிருங்கேரி மட மேலாளர் நாராயணன் உள்பட திருக்கோயில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.             

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்