முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      வேலூர்
Image Unavailable

 

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமை தாங்கினார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இதில் கல்லூரி துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம், மெக்கானிக்கல் துறை தலைவர் பி.ராமசாமி, எம்பிஏ துறைத்தலைவர் கே.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் டி.ரீகன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் வி.திருநாவுக்கரசு சிறப்புரை ஆற்றி பேசியது, இக்கல்லூரியில் படித்த நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும் உங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை எப்போதும் மறக்கக்கூடாது.

அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருங்கள். மேலும் பணி செய்துகொண்டே மேற்படிப்பு படியுங்கள். குறிப்பாக ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ளுங்கள்.4வருட பொறியியல் படிப்பை படித்த உங்களுக்கு 40 வருட வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை நீங்கள் இப்போது உணருகிறீர்கள். உங்களுடன் படித்த சக நண்பர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

பொறியியல் படிப்பை படித்த எல்லோரும் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவின் பொருளாதார கொள்கையால் அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டு மட்டும் 2.87 லட்சம் கோடி அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள் இதன் மூலம் உருவாகின்றன. இதனால் பொறியியல் படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மத்திய அரசின் மேக் இன் இன்ஜினியர்ஸ் இன் இந்தியா (இந்தியாவில் பொறியாளர்களை உருவாக்குவது) என்ற திட்டத்தால் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பெரு நன்மையாகவும், வாய்ப்பாகவும் இருக்கும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிய வருடத்திற்கு 40ஆயிரம் பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணியில் சேர நீங்கள் உங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். இந்தியாவில் உருவாகும் மொத்த பொறியாளர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருந்து உருவாகிறார்கள். நமது மாநிலம் திறமையான பொறியாளர்களை உருவாக்கிஅவர்கள் உலகெங்கும் பணிபுரிகிறார்கள். நீங்கள் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

பேராசிரியர் கே.பாரதி நன்றி கூறினார். மேலும் கல்லூரி துறை பேராசிரியர்கள் இளங்கோ, கார்த்திகேயன், சண்முகம், விஜயகுமார், சந்தோஷ், கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும் இதில் முன்னாள் மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்