முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் ஆயிபாளையம் குட்டை தூர்வாரும் பணி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், சிறுவலூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஆயிபாளையம் குட்டை தூர் வாரும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில்,  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பூமிபூஜையிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

பூமிபூஜை

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பூமிபூஜையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

104 ஏரி, குளம், குட்டைகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  அம்மா  நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள்.  அம்மா அவர்களின் நல்லாசியோடு  தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம் குட்டைகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார ஆணையிட்டதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 104 ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோபி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 51 நீர்நிலைகள் தூர்வாரப்படவுள்ளது. இன்றைய நிலையில்  சிறுவலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ஆயிபாளையம் குட்டை சுமார் 8 இலட்சம் கன அடி நீர் தேக்கம் செய்யும் அளவு உள்ளது. இன்று தொடங்கப்பட்ட தூர்வாரும் பணியின் மூலம் 4 இலட்சம் கன அடிகள் அதிகப்படுத்தப்பட்டு 12 இலட்சம் கன அடிகள் நீர்தேக்கம் செய்ய வழிவகை செய்யப்படும்.

ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் பொழுது இக்குட்டையில் இருந்து எடுக்கப்படும் வண்டல்மண்கள் ஒரு ஏக்கர் நஞ்சை உள்ள விவசாயிக்கு 25 யூனிட் வரையும், ஒரு ஏக்கர் புஞ்சை உள்ள விவசாயிக்கு 30 யூனிட் வரையும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த குளம் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இக்குளம் தூர்வாரப்படுவதன் மூலம் இக்குளத்தைச் சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயன்பெறும். மேலும்  தமிழ்நாடு முதலமைச்சர்  ரூ.2,247 கோடி வறட்சி நிவாரண நிதியாக வழங்க அறிவித்துள்ளார்கள். பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு என மத்திய அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.16,000 கோடியில் தமிழ்நாட்டு விவசாய பெருமக்களுக்கு பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்