முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்லாயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகளால் திருவிழாக்கோலம் பூண்டது ஊட்டி நகரம்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      நீலகிரி

மலர்காட்சியையொட்டி பல்லாயிரக்ணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஊட்டி நகரம் திருவிழாக் கோலம் பூண்டது.

ஊட்டி மலர்காட்சி

ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகாட்சி, ரோஜா காட்சி, மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்டவைகளும், மாவட்ட நிர்வாகம் மற்றும்  சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டு கோடை விழாவை கடந்த 6_ந் தேதி கோத்தகிரியில் காய்கறி காட்சியுடன் கோடை விழா துவங்கியது. கோடை விழா நிகழ்ச்சிகள் ஊட்டியிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கடந்த 10_ந் தேதி முதல் தினந்தோறும் மாலை 3.00 மணி முதல் இரவு 8 மணி நடைபெற்று வருகின்றன. இம்மாதம் 31_ந் தேதி வரை நடைபெறும் கோடை விழா நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடனங்கள், பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கோடை சீசனின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 121_ வது மலர்காட்சி வெள்ளிக்கிழமை துவங்கியது. கண்காட்சியையொட்டி சுமார் ஒரு லட்சம் பலவண்ண ரோஜா மலர்கள் மற்றும் கார்நேசன் மலர்களைக்கொண்டு  வடிவமைக்கப்படிருந்த மகாபலிபுரம் கோயில் சிற்பம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

கூட்டம் அதிகரிப்பு

இந்த நிலையில் மலர்காட்சி நாட்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
நேற்று காலை முதல் மழையில்லாமல் நல்ல சீதோஷ்ண நிலை நிலவியது. காலை முதலே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியது. இதனால் பூங்கா சாலையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளே தெரிந்தன. மலர்காட்சியையொட்டி ஊட்டியின் நுழைவு பகுதிகள் அனைத்திலும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்ததால் நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்திருந்தது. ஆனால் நகரின் அனைத்து சாலைகளிலும் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து சென்றன.மலர்காட்சியை காண வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தாவரவியல் பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்

ஊட்டியில் விழாக்கோலம்

நடத்தப்பட்டது. ஊட்டி மலர்காட்சியை காண பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் சங்கமித்ததால் ஊட்டி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மலர்காட்சியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்தை சீரமைப்பதற்காகவும் மாவட்ட எஸ்.பிமுரளி ரம்பா நேரடி மேற்பார்வையில், கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்