முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.40 லட்சம் செலவில் ஆனந்த விலாச மண்டபம் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சன்னிதானம் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 22 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.40 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஆனந்த விலாச மண்டபத்தைசிருங்கேரி ஸ்ரீ சாராதா பிடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சன்னிதானம் திறந்து வைத்தார்.

 மாசி,ஆவணி திருவிழா

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2&ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா மற்றும் ஆவணித்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் 8&ம் திருநாள் அன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா நடைபெறும். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்த விலாச மண்டபத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். 

ஆனந்த விலாச மண்டபம்

இந்த ஆனந்த விலாச மண்டபம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்து விட்டது. இந்த மண்டபம் சிருங்கேரி ஸ்ரீ சாராதா பிடம் சார்பில் ரூ.40 லட்சம் செலவில் உபயமாக கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட ஆனந்த விலாச மண்டபத்தை சிருங்கேரி ஸ்ரீ சாராதா பிடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சன்னிதானம் திறந்து வைத்தார். முன்னதாக காலையில் ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சன்னிதானம், ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர சன்னிதானம் ஆகியோர் கோவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பலர் பங்கேற்பு

நிகழ்ச்சியில், கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன், ஸ்தலத்தார் சபை தலைவர் குமார், கைங்கரிய திரிசுதந்திரகள் சபா தலைவர் சேது ஆண்டி தீட்சதர், தமிழ்நாடு பிராமண சங்க திருச்செந்தூர் கிளை தலைவர் ஐந்துகோடி அரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்