காஞ்சிபுரம் மாவட்டம் வறட்சி சூழ்நிலை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் : வேலைவாய்ப்புத் துறை செயலாளர் பி.அமுதா தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 05 23

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் பி.அமுதா., தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

இக்கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர், வேளாண்மைத்துறையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளின் கால்நடைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உலர் தீவனப்புல் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பசுந்தீவனப்புல் வளர்ப்பது குறித்தும் அசோஸா வளர்த்தல் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்தும் கேட்டறிந்தார். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். நகராட்சிகளை பொறுத்த வரை குடிநீர் விநியோகம் செய்திட 41 பணிகள் ரூ.299.95 லட்சம் மதிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டு 21 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 20 பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

நிதிமூலம் முதற்கட்டமாக 56 குடிநீர் திட்டப் பணிகள் ரூ.236.60 இலட்சம் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட 55 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 1 பணி மட்டும் நடைபெற்று வருகிறது இரண்டாம் கட்டமாக 14 பணிகள் ரூ.212.5 இலட்சம் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 2 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 12 பணிகள் நடைபெற்று வருகின்றன. பேரூராட்சிகளில் ளுனுசுகு நிதி மூலம் 450 குடிநீர் திட்டப் பணிகள் ரூ.197.57 மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 448 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன 2 பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊரகப் பகுதியில் பல்வேறு திட்டங்கள் மூலம் முதற்கட்டமாக 102 குடிநீர் திட்டப்பணிகள் 253.39 லட்சம் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 37 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 65 பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக 393 பணிகள் 8.44 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 43 பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 350 பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கண்காணிப்பு அலுவலர் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அதன் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மூலம் நiபெற்றுள்ள குடிமராமத்துப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் கண்காணிப்பு அலுவலர் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சிறுகாவேரிப்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் இயற்கை இடர்பாடு நிதி 2016-17ல் ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு பைப் லைன்கள் மூலம் பாலாஜி நகர் மற்றும் இ.பி.அவின்யூ பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் குடிநீர் விநியோகம் செய்து தரப்பட்டுள்ளதை பார்iiயிட்டார். கனக சுப்புரத்தினம் நகரில் மாவட்ட ஊராட்சி நிதி மூலம் ரூ.2 இலட்சத்து 80,000/- மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

பின்னர் திருப்புட்குழியில் வறட்சி நிவாரணத் திட்டத்தில் மானிய விலையில் உலர் தீவனப்புல் விவசாயிகளுக்கு வழங்கிய கண்காணிப்பு அலுவலர் விவசாயிகளின் கால்நடைகளின் தேவைக்கு ஏற்ப தீவன்புல் கிடைப்பதை உறுதி செய்தார். பின்னர் விஷாரில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மூலம் ஏரி தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டார். வயலக்காவூரில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர்தீவனம், புல் வழங்கிய கண்காணிப்பு அலுவலர் அங்கு நடைபெற்ற கால்நடை பாதுகாப்பு முகாமில் விவசாயிகளுக்கு தாது உப்பு கலவையை வழங்கினார். அஸ்ஸோஸா பசுந்தீவன உற்பத்தி குறித்தும் ஹைட்ரோ போனிக் உற்பத்தி குறித்தும் செயல்முறை விளக்கம் அளிப்பதை பார்வையிட்டார். இது பால் உற்பத்தியை கூட்டுவதற்கும் கால்நடைகளின் வெப்பம் தணிப்பதற்கும் பயன்படும் என்பதை விவசாயிகள் அறிந்துள்ளனரா என்பதையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சார் ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: