முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      நீலகிரி

ஊட்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

ஆன்லைன் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 1148 பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்விற்கான விண்ணப்பங்கவை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30_க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட பழங்குடியின, பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு உண்டு. ஆதிதிராவிட பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

இலவச பயிற்சி வகுப்புகள்

என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 . வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பினை மட்டும் நம்பி காத்திருக்காமல் போட்டித் தேர்வுகளை எழுதி வேலை பெறுவதற்கு இது அரிய வாய்ப்பாகும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4_வது பிளாக்கில் இயங்கும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று(24_ந் தேதி) முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. எனவே தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு 0423_2223346 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்