முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை தாலுக்கா அலுவலகத்தில் 6வது நாளாக ஜமாபந்தி மனுக்கள் குவிந்தன

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் 6வது நாளாக திருவண்ணாமலை தெற்கு உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கொளக்குடி, சமுத்திரம், நல்லவன்பாளையம், அரடாப்பட்டு, சு.பாப்பாம்பாடி, கீழ்கச்சிராப்பட்டு, மேல்புத்தியந்தல், ச.கீழ்நாச்சிப்பட்டு, தென்மாத்தூர், உடையானந்தல், மேல்செட்டிப்பட்டு, விஸ்வந்தாங்கல், மஞ்சம்பூண்டி, கீழ்செட்டிப்பட்டு, அரசுடையாம்பட்டு, சு.ஆண்டாப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல் உள்ளிட்ட 19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஜமாபந்தி

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் தாசில்தார் ஆர்.ரவி, முன்னிலை வகிக்க, திருவண்ணாமலை மண்டல துணை தாசில்தார் பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார். ஜமாபந்திக்கு தலைமையேற்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். 6ம் நாளான நேற்று நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் மொத்தம் 204 மனுக்கள் பெறப்பட்டன. உடனடி தீர்வு காணப்பட்ட 18 மனுதாரர்களுக்கு ஜமாபந்தி அலுவலர் ப.சுப்பிரமணியன் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது தகுதியுள்ள ஏழை எளிய மனுதாரர்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் உரிய தீர்வு காணப்பட்டு ஜமாபந்தி நாட்களில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆர்.செந்தில்குமார், தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன், வேளாண் உதவி இயக்குநர் சி.அரக்குமார், வேளாண் அலுவலர் கே.சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏ.கோபால், ஏ.ஏழுமலை, பி.ரூபா, கே.தனசேகர், ஜி.வித்யா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் வருவாய் ஆய்வாளர் பி.மாலதி நன்றி கூறினார். 7ம் நாளான 29ந் தேதி (திங்கட்கிழமை) திருவண்ணாமலை தெற்கு உள்வட்டம் மற்றும் வெறையூர் உள்வட்டம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து