முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் 112 பயணாளிகளுக்கு ரூ. 12 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் சபாநாயகர் ப.தனபால் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 27 மே 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம் கம்மாளத்தொட்டிப்பாளையம் கிராமத்தில் வருவாய் துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி  தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் ப.தனபால்  தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பயனாளிகளுக்கு  சட்டப்பேரவை தலைவர்  நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்

நலத்திட்ட உதவிகள்

ஏழை எளிய, அடிமட்ட மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கில்  அம்மா  பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வழங்கிவந்தார்கள் இன்றும் அவர்களின்  வழியில் நடக்கின்ற  அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது. அதனடிப்படையில் அவினாசி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி இந்த தொகுதியினை சிறந்த சட்டமன்ற தொகுதியாக மாற்றிடும் வகையில் உங்களுக்காக முனைப்புடன் செயல்பட்டு தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளின்படி  செயலாற்றி வருகிறேன். அதிலும் குறிப்பாக இப்பகுதி மக்கள் என்னிடம் அவினாசி அத்திக்கடவு திட்டத்தை வழியுறுத்தியதன் அடிப்படையில் மீண்டும்  அம்மா அவர்களிடம் தேர்தல் முடிந்ததும் இத்திட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்து அனுமதி பெற்றுதுடன் பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக 2017-2018 நிதியாண்டில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

தற்பொழுது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் குடிநீர் தட்டுப்பாட்டை சீர்செய்ய திட்டங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்  செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி சீரான முறையில் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளும் வகையில் அன்னூர், அவினாசி உட்பட 3 பேரூராட்சிகளுக்கு ரூ.220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் சீராக வழங்க ஆவணம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கிராம பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மூலம் வெகு விரைவில் இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்ந்திட வாய்ப்பு உள்ளது. இதுபோல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நான் உங்களுடன் இருப்பேன் தற்பொழுது உங்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடிவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளேன். ஒரு மாத காலத்திற்குள் உரிய ஆணையினை நானே நேரில் வந்து உங்களிடம் வழங்குவேன் என  சட்டப்பேரவை தலைவர் ப.தனபால்  தெரிவித்தார்.

25 பயனாளிகளுக்கு பட்டா

 இன்று நடைபெற்ற விழாவில் வீட்டுமணை பட்டா 25 பயணாளிகளுக்கும், பட்டா மாறுதல் 38 பயணாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகைக்கான ஆணை 36 பயனாளிகளுக்கும், தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கும், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பாதுகாப்பு பத்திரம் ஆணையினையும் என 112 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கியதுடன் அப்பகுதியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட மையத்தையும், குரும்பபாளையம் பகுதியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட மையத்தையும்,  சட்டப்பேரவை தலைவர் ப.தனபால்  திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர்  சுரேஷ், அன்னூர் வட்டாட்சியர்  ராஜன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து