சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. பாண்டியன் ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      கடலூர்
chithamparam mla

சிதம்பரம் தொகுதி பரங்கிபேட்டை பேரூராட்சி அகரம் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்  நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

 நிவாரணம் வழங்கி ஆறுதல்

சிதம்பரம் அடுத்த பரங்கிபேட்டை அகரம் நாராயன் தெருவை சார்ந்த சின்னதம்பி என்பவரது குடிசை வீடு சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.  இதனை அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.

பலர் பங்கேற்பு

உடன் பரங்கிபேட்டை நகர கழக செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய கழக செயலாளர் அசோகன், சிதம்பரன் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், அம்மா பேரவை சந்தர்ராமஜெயம்,முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கனகராஜன், முன்னாள் கவுன்சிலர் கனேசன், நிர்வாகிகள் பாஸ்கர் பாஸ்கர், ஜே.கே.முத்து, அருள், ராஜராஜன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து