முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் வைகாசி திருவிழா 44வது ஆண்டுபொருட்காட்சி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 29 மே 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார்கள் உறவின்முறையைச் சேர்ந்த அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் வைகாசித் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.இதையொட்டி திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 44வது ஆண்டு பொருட்காட்சியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
திருமங்கலம் நகரில் பாண்டியகுல சத்திரிய நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பழம்பெருமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் தேவஸ்தானம் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வைகாசி திருவிழா 13 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் 2017ம் ஆண்டு ஹேவிளம்பிவருட வைகாசி திருவிழா நேற்று முன்தினம் காலை 11மணியளவில் கொடியேற்றத்துடன்(துவஜாரோகணம்) கோலாகலமாக தொடங்கியது.தொடர்ந்து 13நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா மற்றும் சமணர்கழுவேற்றம்,முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன் திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் மாபெரும் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வைகாசி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் 44வது ஆண்டு பொருட்காட்சியின் திறப்புவிழா நேற்று முன்தினம் இரசு வெகுசிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு வைகாசி திருவிழா 44வது ஆண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்து வாழ்த்தினார்.முன்னதாக அருள்மிகு பத்ரகாளி மாரியம்மன் தேவஸ்தான கோவிலுக்கு வருகைபுரிந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பி.கே.என் உறவின்முறை மற்றும் பள்ளி,கல்லூரி கமிட்டி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.இதை தொடர்ந்து திருமங்கலம் அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அம்மன் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுநடத்தினார்கள்.
ஆப்போது அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா பி.பி.சி.எஸ். ரமேஷ்பாபு நாடார்,உறவின்முறை நாட்டாண்மைகள்,பி.கே.என் வித்யாசாலா கமிட்டி செயலாளர் கன்யாகுமார் நாடார்,தலைவர் ரத்னம் நாடார்,கல்லூரி கமிட்டி செயலாளர் செல்வராஜ் நாடார்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,தாலுகா வேளாண்விற்பனை குழுதலைவர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் நகர்மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,அவைதலைவர் ஜஹாங்கீர்,வழக்கறிஞர் சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து