புதுப்பாளையம் ஒன்றியத்தில் ரூ.1கோடி மதிப்பிலான வளர்ச்சிபெற்ற பணிகள்: அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      திருவண்ணாமலை
chengam photo 2

 

செங்கம் தாலுக்கா கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் ரூ.1கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகளை தமிழக இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பார்வையிட்டார்.

வளர்ச்சிதிட்ட பணி

புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் ரூ.14.7லட்சத்தில் புதிய கிணறு ரூ.11.6லட்சத்தில் ஆரம்பப்பள்ளி புதியகட்டிடம் ரூ.3லட்சத்தில் கிணறு ஆழ்படுத்துதல் வாசுதேவன்பட்டு கிராமத்தில் ரூ.14.லட்சம் மதிப்பில் கிராமசேவை நிலைய கட்டிடம் ரூ.9.9லட்சம் மதிப்பில் புதிய கிணறு அல்லியந்தல் கிராமத்தில் ரூ.9.9லட்சம் மதிப்பில் புதியகிணறு ரூ.2.5லட்சம் மதிப்பில் பழைய கிணறு ஆழ்படுத்துதல் ரூ.14லட்சம் மதிப்பில் கிராம சேவை மையத்திற்கு இடம் அரிதாரிமங்கலம் கிராமத்தில் ரூ.9.9லட்சம் மதிப்பில் புதிய கிணறு கொட்டகுளம் கிராமத்தில் தாய்திட்டத்தில் ரூ.24லட்சம் மதிப்பில் தார்சாலை போன்ற நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பார்வையிட்டார்.

உடன் கலசபாக்கம் தொகுதி எம்.எல்.எ பன்னீர்செல்வம் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் உதவி செயற்பொறியாளர் தனசேகர் ஆணையாளர் மணிஎழிலன் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஷ்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் மாதிமங்கலம் துரை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் படுர் லட்சுமணன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலா தவமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து