முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கக்கதாசம் தரப்பு ஜவளகிரி கிராமத்தில் 463 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 83 ஆயிரத்து 748 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

புதன்கிழமை, 31 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கக்கதாசம் தரப்பு ஜவளகிரி கிராமத்தில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று(31.05.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓசூர் சார் கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா முன்னிலை வகித்தார். 

நலத்திட்ட உதவிகள்

பின்பு துறை வாரியாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவர்கள் மூலமாக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் பேசும் பொழுது :

மக்கள் தொடர்பு திட்டமானது அரசின் திட்டங்கள் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு மக்களை தேடி கிராமங்களுக்கு சென்று இது போன்ற முகாம்களை அமைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இந்த முகாமின் நோக்கமாகும். தேன்கனிக்கோட்டை வட்டம் மலைகிராமங்கள் அதிகம் கொண்டுள்ள பகுதியாகும். முக்கியமாக இப்பகுதியில் உள்ள அனைத்து குழைந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக பெண்கல்விக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும். தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதியை சேர்ந்த மாணவியர்களுக்கு கல்வி பயில முக்கியதுவம் அளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட் டோர் நலத் துறையின் கிழ் இயங்கும் அரசு விடுதிகளில் தங்கி படிக்க முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தை திருமணம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஜவளகிரி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருதில் கொண்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த பகுதியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைத்து அதிகளவில் சாகுபடி உற்பத்தி விவசாயிகள் செய்து பயனடைய வேண்டும். அதேப்போல் தற்போது மண்பரிசோதனை வாகனம் மூலம் மண் பரிசோதனை செய்யப்படுகிறது. மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தன்மைகேற்ப இயற்கை உரங்கள் இட்டு விவசாயத்தை பெருக்கி கொள்ள வேண்டும். ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்துள்ள நிலையில் மழை நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும்.

மழை காலங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க கிராமபுறங்களில் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே கடந்த மாதம் தேன்கனிக்கோட்டையில் துவக்கி வைக்கப்பட்ட நாட்டு மாட்டு பால் கொள்முதல் மையம் சிறப்பாக செயல்பட்டு 1 லிட்டர் பால் ரூ. 40 - க் கொள்முதல்செய்யப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கால் நடை வளர்ப்போர் நாட்டு இன பசுக்களை வளர்க்க வேண்டும். இந்த மலை பகுதிக்கு போதிய சாலை வசதி, போக்குவரத்து வசதி, பள்ளி கூடம், ஏற்படுத்தி தரப்படும். அரசாங்கத்தின் அனைத்து சலுகைள் பெறுவதற்கு அனைத்து திட்டங்களையும் ஆன்லைனில் பதிவு செய்து தங்களுடைய ஆதார் அட்டையையும் இணைத்து கொள்ள வேண்டும்.

வீட்டு மனைபட்டா

மேலும் இன்று மட்டும் ஜவளகிரி கிராமத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா 43, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை-76 , சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ்-5 நபர்களுக்கு தாதுஉப்பு கலவை, சமூக நலத்துறை சார்பில் 258 தாய்மார்களுக்கு தாலிக்க தங்கம், வேளாண்மைத்துறை சார்பில் 6 நபர்களுக்கு இடுப்பொருட்கள் மற்றும் துவரை நாற்றுகள், புதுவாழ்வு திட்டம் சார்பில் 19 பயனாளிகளுக்கு கடனுதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 3 நபர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி என ஆக மொத்தம் 463 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 83 ஆயிரத்து 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற வேண்டுமென கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார். தொடர்ந்து ஜவளகிரி அரசு பள்ளியில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் ( சமூக பாதுகாப்பு திட்டம் வசந்தா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சங்கரன், கலெக்டர் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) பானுமதி,, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன்; தாட்கோ மேலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் தேவிபிரியா, வன சரக அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் சிவசங்கரன், கால்நடை துறை துணை இயக்குநர் மரு.சண்முகம், தோட்டகலை துறை உதவி இயக்குநர் வி.சிதம்பரம், தனி வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) லட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் திருமால், வருவாய் ஆய்வாளர் மதன், சுரேந்தர், கிராம நிர்வாக அலுவலர் அருண், ஜவளகிரி சமூக சேவகர் முத்துராஜ், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், சந்தானம், கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து